| ADDED : பிப் 17, 2024 01:22 AM
கொல்லம், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் பத்தனாபுரம் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் அமல், 14, ஆதித்யா, 13, அருகேயுள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர்.நேற்று முன்தினம் மாலை, பள்ளியில் இருந்து வீடு திரும்பிய இருவரும் விளையாடச் சென்றனர். இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசாருடன் சேர்ந்து உள்ளூர் மக்களும் சேர்ந்து இரவு வரை பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை கல்லடா ஆற்றங்கரையில் சிறுவர்கள் அமல் மற்றும் ஆதித்யா இருவரும் சடலமாக கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆற்றில் மீன்பிடிக்க சென்ற போது இருவரும் நீரில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.