உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

ஒரே வரி எனும் பொய்!'ஒரே நாடு; ஒரே வரி' என்று ஜி.எஸ்.டி., குறித்து பா.ஜ., கூறியது. அந்த ஜி.எஸ்.டி.,யில் பல்வேறு விகிதங்களில் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒரே வரி என்பது சுத்த பொய் என நிரூபணமாகிஉள்ளது. இந்த அனைத்து வரிகளும் கடைசியில் பொது மக்கள் தலையில் தான் விழுகிறது. அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதிஅன்றும் இன்றும் தொடர்கிறது!பாபரின் தளபதி அயோத்தியில் செய்ததை, அதன் பின் சம்பலில் நடந்ததை, இன்று வங்கதேசத்தில் நடத்துகின்றனர். அவர்கள் வம்சத்தினர் இங்கும் பிரிவினையில் ஈடுபடுவதை தொடர்கின்றனர். இந்த பிரிவினைவாதிகளுக்கு பல நாடுகளில் சொத்துக்கள் உள்ளன. பிரச்னை என்றால் ஓடிவிடுவர். யோகி ஆதித்யநாத்உ.பி., முதல்வர், பா.ஜ., துாதரக அழுத்தம் தேவை!எந்த நாட்டில் வன்முறை நடந்தாலும் அது வேதனைக்குரியது. நம்முடன் எல்லையை பகிரும் வங்கதேசத்தில் ஹிந்துக்களை குறிவைத்து தாக்குவது ஏற்றுகொள்ள முடியாதது. துாதரக அளவில் பேச்சு நடத்தி வன்முறையை தடுக்க, மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்.சச்சின் பைலட்மூத்த தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை