|  ADDED : ஜன 24, 2024 01:09 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
யாத்திரையை சீர்குலைக்க முயற்சி!அசாமில் ராகுலின் யாத்திரையை சீர்குலைக்க, பா.ஜ.,வில் உள்ள சில சக்திகள் முயற்சிக்கின்றன; இது தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதாகும். மக்களின், சமூகத்தின் பிரச்னைகளை புரிந்து கொள்ள ராகுல், இந்த யாத்திரையை மேற்கொள்கிறார். சித்தராமையாகர்நாடக முதல்வர், காங்கிரஸ்தேர்தல் வருகிறது!ராமர் நமது ஒவ்வொருவரது இதயங்களிலும் நிறைந்துள்ளார். விஷ்ணுவின் அவதாரமான பகவான் ஸ்ரீராமர் வருகை புரிவதாக பா.ஜ., கூறுகிறது. ராமர் வரவில்லை. தேர்தல் வருகிறது. அதனால் ராமர் துதி பாடுகின்றனர்.தேஜ் பிரதாப் யாதவ்பீஹார் அமைச்சர், ஆர்.ஜே.டி.,நாடு பிளவு பட்டிருக்காது!நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நாட்டின் முதல் பிரதமராக இருந்திருந்தால், நம் நாடு பிரிந்திருக்காது என்று நம்புகிறேன். நாட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருந்திருப்பர். இந்தியா எப்போதோ வளர்ச்சி அடைந்திருக்கும்.சுவேந்து அதிகாரிமே.வங்க எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,