| ADDED : பிப் 09, 2024 01:19 AM
சட்டத்தில் தவறு ஏற்படும்!பார்லிமென்டில் எதிர்க்கட்சியினரை சஸ்பெண்ட் செய்துவிட்டு சட்ட மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டன. தயவு செய்து அப்படி செய்யாதீர்கள். முறையான விவாதம் இல்லை என்றால் சட்டத்தில் தவறு ஏற்படலாம்.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்மன்மோகனை அழ வைத்தனர்!மன்மோகன் சிங் இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டவர்; நிதியமைச்சராக இருந்து நாடு கடனில் மூழ்காமல் காப்பாற்றியவர். காங்கிரஸ் ஆட்சியில் அதன் மேல்மட்ட தலைவர்கள் செய்த தவறுக்காக, அவர் லோக்சபாவில் கண்ணீர் சிந்த வேண்டி இருந்தது.தேவ கவுடாதலைவர், ம.ஜ.த.,ஓ.பி.சி.,யினருக்கு எதிரானவர்!காங்கிரசில் நேரு துவங்கி ராகுல் வரை அனைவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானவர்கள். நேரு அரசு வேலைகளில் ஓ.பி.சி.,யினர் உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்றவர். தற்போது இவர்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு கேட்கின்றனர்.அமித் மால்வியாமூத்த தலைவர், பா.ஜ.,