உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

அமைதியே முக்கியம்! ஒரு நாட்டின் ஆதாயத்தை விட, மனித குலத்தின் அமைதியே முக்கியம். இந்தக் கொள்கையின் அடிப்படையில் உலக நாடுகள் செயல்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு பிரச்னையையும் நம்முடையதாக கருதினால் தான், அதற்கான தீர்வுகளைக் காண முடியும். மோதல்கள் மற்றும் முரண்பாடுகள் நிறைந்த உலகில், ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் வெற்றி அளப்பரியது. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதிபொது சட்டம் ஆகாது! பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்ற தேவையான பலம் பா.ஜ.,விடம் இருந்தால், அதை பார்லிமென்டில் அறிமுகப்படுத்த வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மட்டும் அச்சட்டம் அமல்படுத்தினால், அது, பொது சட்டமாக இருக்காது. இந்த விவகாரத்தில், ஒட்டுமொத்த நாடும் முடிவு செய்ய வேண்டும். ஒமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிமவுனம் காப்பது ஏன்? இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் வேலையின்மை பற்றி கேள்வி எழுப்பும் காங்கிரசின் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அவரது கட்சி நிர்வாகிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் மவுனம் காப்பது ஏன்? அக்கட்சி நடத்தும் ‘அன்பின் கடை’ என்பது உண்மையில் ஊழல் தொழிலை நடத்துவது போல் தோன்றுகிறது. பன்சூரி ஸ்வராஜ் லோக்சபா எம்.பி., பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை