உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யம்மாடியோவ்...! நீரஜ் சோப்ராவின் மலைக்க வைக்கும் சொத்து!

யம்மாடியோவ்...! நீரஜ் சோப்ராவின் மலைக்க வைக்கும் சொத்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவின் சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் மலைக்க வைப்பதாக உள்ளது.

பெருமை

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்று அனைத்து இந்திய ரசிகர்களையும் பெருமை கொள்ள செய்து விட்டார் நீரஜ் சோப்ரா. நாடு முழுவதிலும் இருந்து அவருக்கு குவிந்து வரும் வாழ்த்துகள் இன்னமும் முற்று பெறவில்லை. ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷ்த் நதீமுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சுவாரசியம்

வாழ்த்து மழையில் இருவரும் நனைந்து கொண்டிருந்தாலும் விளையாட்டை கடந்து அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளி வந்திருக்கிறது.

ரூ.37 கோடி

இவர்களில் நீரஜ் சோப்ராவின் சொத்து விவரங்கள் மலைக்க வைப்பதாக உள்ளது. விருதுகள், ராணுவத்தில் பணி என பெருமைக்கு சொந்தக்காரரான நீரஜின் தற்போதைய சொத்து மதிப்பு 37 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இவரின் மாத வருமானம் மட்டுமே 30 லட்சம் ரூபாய்.

ஆண்டு வருமானம்

இவரின் வருமானமானது, அவர் கலந்து கொண்ட போட்டிகளில் பெற்ற பரிசுத் தொகை, ஒப்பந்தங்கள், ராணுவ அதிகாரி பணியில் கிடைக்கும் ஊதியம் என பல வகையான ஆதாரங்களில் இருந்து வகைப்படுத்தப்பட்டு கணக்கிடப்பட்டு உள்ளது. வருமான ஆதாரங்கள் பல வழிகளில் இருந்து வந்தாலும் மாதம் 30 லட்சம் ரூபாய், ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் வரை உத்தேசமாக வருமானத்தை கொண்டுள்ளார்.

சொகுசு பங்களா

வருமான விவரமே ஆச்சரியத்தை அளித்தாலும், மற்றொரு பக்கம் அவரின் சொகுசு பங்களா பார்ப்போரை அசர வைப்பதாக இருக்கிறது. ஹரியானாவில் பானிபட் அருகில் 3 அடுக்குமாடி சொகுசு பங்களா அவருக்கு உள்ளது. விளையாட்டில் சாதனையாளரான நீரஜ்க்கு வாகனங்கள் மீதும் அளவில்லா காதல் உண்டு.

ரேஞ்ச் ரோவர்

ரூ.2 கோடி மதிப்பில் ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், போர்டு, டொயோட்டா, மஹிந்தரா நிறுவனங்களின் சொகுசு கார்களையும் நீரஜ் சோப்ரா வைத்துள்ளார். ஹார்ட்லி டேவிட்சன், பல்சர் என உயர் ரக இருசக்கர வாகனங்களையும் வைத்து இருக்கிறார்.

விளம்பரதாரர்

பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் நீரஜ் இருப்பதால் அதில் இருந்தும் ஆண்டுதோறும் வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

விலை உயர்ந்த சொத்து

இவை எல்லாவற்றையும் விட நீரஜ் சோப்ராவிடம் இருக்கும் உயர்ந்த சொத்து, அவரது தன்னடக்கமும் தன்னை வென்ற போட்டியாளரை போற்றி பாராட்டும் உயர்ந்த குணமும் தான்.

ரூ.1 கோடி

நீரஜ் வருமானத்துடன் அர்ஷித் நதீம் சொத்தை ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு, அவருக்கு 1 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே சொத்து மதிப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது அவர் தங்கப்பதக்கம் பெற்ற நிலையில், வருமான நிகர மதிப்பு மேலும் உயரும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

theruvasagan
ஆக 13, 2024 18:34

அட போங்கையா. 37 கோடி எல்லாம் ஒரு சாதனை என்று சொல்ல வந்துட்டீங்க. எங்க ஊரு மாவட்ட அயலக அணி செயலர் அசால்டா 2000 கோடி சம்பாதிச்சதுக்கு முன்னாடி இதல்லாம் நிக்குமா. அப்புறம் அந்த 30000 கோடி மேட்டரை சொன்னா மூர்ச்சை போட்டு விழுந்துருவீங்க.


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2024 13:35

இது என்ன ஜுஜுபி, காங்கிரஸ் ஆட்சியில் கருநாடகத்தில் ஒரு MLA தொகுதிக்கு போட்டியிட்ட அப்பா மகன் இருவரும் செய்த தொழில் ப்ரோக்கர் மண் பெண் என்று இரண்டையும் கலந்து ப்ரோக்கர்களாக இருந்தவர்கள் என்று மக்கள் வெளிப்படையாக கூறினர் ஆனால் அவர்களின் சொத்து மதிப்போ ??? இவர் அதனை அடைய நான்கு ஜென்மம் எடுக்க வேண்டும் , ஆனால் உங்கள் கட்டுரையின் தாக்கம் பல நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமும் அமைந்துள்ளது , டாஸ்மாக் தமிழர்கள் படிக்கமாட்டார்கள் , ஆனால் நல்ல உள்ளம் படைத்த தமிழர்கள் உங்களின் பத்திரிக்கையை வாங்கி அவர்களின் சந்ததிக்கு வழிகாட்டுவார்கள் என்று நம்புகிறேன்


Anand
ஆக 13, 2024 12:38

என்னங்க நீங்க இங்குள்ள உபிஸ்களின் சொத்துமதிப்புகளை பற்றி கொஞ்சமாவது அறிந்துக்கொள்ளாத வெள்ளந்தியா இருக்கீங்க, அவர்களுக்கு முன்னால் இவரோட சொத்தெல்லாம் ஜுஜுபி.


P Karthikeyan
ஆக 13, 2024 12:08

எங்க ஊரு கவுன்சிலர் குறைஞ்ச பட்சம் நூறு கோடி சொத்து வச்சிருக்காரு ...அது யாரு கண்ணுக்கும் தெரியல ..


lana
ஆக 13, 2024 11:54

பல கிரிக்கெட் வீரர் இதை விட அதிகம் வைத்து உள்ளனர். சமூகத்தில் அதிக கெடுதல் உண்டாகும் திரைப்படம் சின்ன திரை பிரபலங்கள் அதிகம் சொத்து உள்ள போது விளையாட்டு வீரர்கள் வைத்து இருப்பது மட்டும்தான் உங்களுக்கு தெரியும்


Jysenn
ஆக 13, 2024 11:26

Not impressed. Even a councilor of a corporation has more assets and earnings than this gentleman.


Duruvesan
ஆக 13, 2024 11:05

வெறும் டிகிரி படிச்சி ஒரு தொழிலும் செய்யாமல் ரெட் ஜெயட்டுனு ஆரம்பிச்சி 400 கோடி மதிப்பு காட்டினாரு ஒருத்தர், அதை சொன்னா ஓகே, இதை சொல்வது கேவலமா இருக்கு


Rpalnivelu
ஆக 13, 2024 11:24

என்னங்க அவருடைய சொத்தை இப்படி குறைவாக மதிப்பீடு பண்ணிடீங்க அவர் பல படங்களில் நடித்து ஹாலிவுடையே ஓர் கலக்கு கலக்கி லட்ச கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றவர்.


நிக்கோல்தாம்சன்
ஆக 13, 2024 13:30

தன்னடக்கம் என்று ஒரு வார்த்தை எழுதியிருந்ததை மறந்து விட்டீர்களே யுவர் ஹானர் , அது நீங்க கூறிய திருட்டு ஹம்மர் வோட்டியவனுக்கு இருக்குதா?


sundarsvpr
ஆக 13, 2024 11:00

ஒரு உலக சாதனை செய்தவர் நிறைய வாழ்த்துக்களும் பரிசுகள் பெற்றது அவரின் வருமானமாக எடுத்துக்கொள்ளகூடாது. விளம்பரத்தில் கோடி கணக்கில் பெற்றது மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும். அதுபோல் சினிமாவில் ஈட்டும் சொத்தும் விமர்சனத்திற்கு உட்பட்டவை. இதுவும் மக்களை பாதிப்பவை. அரசியல்வாதிகளின் சொத்து சேர்த்தது விமர்சனத்திற்கு உட்பட்டவை. சம்பாதித்த பணத்தில் விளை நிலங்கள் வாங்குவதில்லை ஏன்? இதனையும் ஊடகங்கள் ஏன் விமர்சனமாய் செய்தி வழங்குவதில்லை?


Just imagine
ஆக 13, 2024 10:56

37 கோடியெல்லாம் ஒரு சொத்தா .... எங்கள் ...நிதி ஒரு மாதம் பாக்கெட் மணியே இதைவிட மேல ...


Rajkumar
ஆக 13, 2024 10:52

இந்த காலத்தில் இது ஒரு மதிப்பா ..கண்டிப்பாக உழைத்து சம்பாரித்துள்ளார் ..அவரை பாராட்டுவோம்


sundarsvpr
ஆக 13, 2024 13:42

வெகுமதியோ பரிசு தொகையோ கேள்விக்குரியது அல்ல. உடலை காட்டி விளம்பரத்தில் பெரும் தொகை விமர்சனத்து உரியது. வருமானத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டுவதை விட ஏழை நடுத்தர மக்கள் வாழ வீடுகள் கட்டி வாடகைக்கு விடலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை