உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு மோசடி வழக்கு: குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை

நீட் தேர்வு மோசடி வழக்கு: குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: 'நீட்' தேர்வு மோசடி வழக்கு தொடர்பாக, குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.நீட் தேர்வில் நடந்துள்ள மோசடிகள் குறித்த குற்றச்சாட்டுகள், தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பீஹாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக 16 பேரை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். குஜராத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடைசி நேரத்தில், முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத் குமார் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்கின் விசாரணையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று (ஜூன் 29) 'நீட்' தேர்வு மோசடி வழக்கு தொடர்பாக, குஜராத்தில் 7 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆமதாபாத், கெடா மற்றும் கோத்ரா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. கோத்ராவில் பலருக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

venugopal s
ஜூன் 29, 2024 19:42

கோத்ரா கலவரங்களுக்கு மட்டுமே ஃபேமஸ் என்று நினைத்து இருந்தேன், மோசடிகள் செய்வதிலும் ஃபேமஸ் தானா? இது தான் குஜராத் மாடல் போல!


S. Narayanan
ஜூன் 29, 2024 16:30

Culprits should get sui punishment irrespective of their of political party.


Palanisamy Sekar
ஜூன் 29, 2024 16:11

இந்த வழக்கில் சிக்கிய ஆட்கள் யாருன்னு பார்த்தால் காங்கிரசில் கோலோச்சிய கும்பல்கள்தான். அவர்களுக்குத்தான் இந்த மாதிரி ஊழல் செய்ய தெரியும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி