உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு

ஜூலை 7ம் தேதி நீட் தேர்வு

புதுடில்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.அந்த வகையில் மார்ச் 3ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்தது. தற்போது, இந்த நீட் தேர்வு, ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vadivelu
ஜன 09, 2024 16:07

நீட் வேண்டாம் நீட் வேண்டாம் என்று இன்னும் இருபது வருடங்களுக்கு சொல்வோம், அதன் பிறகு பழகி விடும்.


ஆரூர் ரங்
ஜன 09, 2024 15:29

அமைச்சர் உதயநிதி தலைமையில் மாணவர்கள் எல்லோரும் நீட் எழுதுங்க????.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி