உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்கிய 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு

நீட் தேர்வு: கருணை மதிப்பெண் வழங்கிய 1563 பேருக்கு ஜூன் 23ல் மறுதேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்ட விவகாரத்தில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) விளக்கமளித்துள்ளது. இதனையடுத்து ஜூன் 23ல் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30ல் முடிவுகள் வெளியாகிறது.மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; கேள்வித்தாள் கசியவில்லை. அதே நேரத்தில், 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் கொண்ட உயர்நிலை விசாரணைக் குழு விசாரிக்கும் என தேர்வை நடத்திய, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g1hcmvd6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சந்தேகம்

மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வு, கடந்த, மே, 5ம் தேதி நாடு முழுதும், 571 நகரங்களில், 4,750 மையங்களில் நடந்தது. இதில், 23 லட்சத்து, 33,297 பேர் தேர்வு எழுதினர். தேர்வு நாளன்று, ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. ஆனால், அதை, தேசிய தே்ரவு முகமையான (என்.டி.ஏ.,) மறுத்தது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள், கடந்த, 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தைச் சேர்ந்த, ஏழு மாணவர்கள், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், நுழைவுத் தேர்வு முறை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது, தேசிய அளவில், அரசியல் பிரச்னையாகவும் மாறியது. நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பல எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியதுடன், மறுதேர்வு நடத்தும்படியும் வலியுறுத்தின. ஆனால், எந்த முறைகேடும் நடக்கவில்லை என, என்.டி.ஏ., கூறியது. பிரச்னை தீவிரமாகியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை, டைரக்டர் ஜெனரல் சுபோத் குமார் சிங், கூறுகையில், ''நாடு முழுதும் உள்ள, 4,750 மையங்களில், ஆறு மையங்களில் மட்டுமே இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கருணை மதிப்பெண்கள்

இந்த மையங்கள், மேகாலயா, ஹரியானாவின் பகதுார்கர்க், சத்தீஸ்கரின் தண்டேவடா, பலுாத், குஜராதின் சூரத் மற்றும் சண்டிகரில் அமைந்திருந்தன. அங்கு தேர்வு எழுதிய, 1,563 மாணவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, என்.சி.இ.ஆர்.டி.,யின் பழைய புத்தக விடையை அளிப்பதா, புதிய புத்தக விடையை அளிப்பதா என்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதுபோல, எந்த பதிலை எடுத்துக்கொள்வது என்ற கேள்விக்கு, இரண்டு விடைகளும் சரி என்று எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப மதிப்பெண் வழங்கப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்னை ஏற்பட்டது'' எனக் கூறியிருந்தார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய (ஜூன் 13) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், இன்றே அதற்கான அறிப்பாணை வெளியிட உள்ளதாகவும் உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) விளக்கமளித்துள்ளது.

ஜூன் 30ல் ரிசல்ட்

இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஜூலை 6ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகான கவுன்சிலிங் நடக்க இருக்கும் நிலையில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், 23ம் தேதி 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30ல் முடிவுகளை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டதுடன், மருத்துவ கவுன்சிலிங் நடத்த தடை இல்லை.மறுதேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு கருணை மதிப்பெண் நீக்கப்பட்டு, அசல் மதிப்பெண்களை வெளியிட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

நீட் தேர்வு கைவிட மாட்டோம்

இதனிடையே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டியில் கூறியதாவது: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் இல்லை. கேள்வித்தாள் கசிந்ததாக எந்த தகவலும் இல்லை. மாணவர்கள் சந்தித்த சவால்கள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நீட்தேர்வை ஒரு போதும் மத்திய அரசு கைவிடாது. பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். அவர்களை கைவிட மாட்டோம். இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட குழு அமைத்து, அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Jai
ஜூன் 13, 2024 21:10

இந்தியா முழுவதும் மாணவர்கள் எழுதும் தேர்வில் கேள்வித்தாள் வெளியாகாமல், மாணவர்கள் காப்பி அடிக்காமல் நடத்தி முடிப்பது சவாலான விஷயம். அது நடந்து உள்ளது. தேர்வில் நீதிமன்றம் தலையிடு குழப்பத்தை உருவாக்குகிறது. சென்ற வருடம் கருணை மதிப்பெண் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஆணை தற்போது குழப்பத்தை உருவாக்குகிறது. திமுக போன்ற கட்சிகள் இந்த தேர்வில் குழப்பத்தை உருவாக்க சில அல்லது பல கோடிகளை அள்ளி வீச தயராக உள்ளனர். ஆகவே தேர்வு ஆணையம் தேர்வை கண்ணும் கருத்தாகவும் நடத் வேண்டும்.


முயல்
ஜூன் 13, 2024 19:20

தீர்ப்பு சொன்னவங்க திரும்ப ஒரு தடவை Bar எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி சாதிச்சுக் காட்டலாம்.


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 17:05

திமுக ஆட்கள் மேற்கு மாவட்டங்களில் நடத்தும் உறைவிடப் பள்ளி மாணவர்களே... மாநிலத்தில் முப்பது சதவீத மருத்துவ இடங்களை அள்ளிக் கொண்டிருந்தபோது அந்தக் கட்சி கேள்வி கேட்டதில்லை.


venugopal s
ஜூன் 13, 2024 16:23

நீதிமன்றங்கள் மட்டும் இல்லை என்றால் இந்த மத்திய பாஜக அரசு இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் எல்லாம் செய்யுமோ?


zakir hassan
ஜூன் 13, 2024 15:36

நாட்டில் சமூக நீதி காக்கப்படும் இல்லையென்றால் மாணவர் முதல் அனைத்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் இது போன்ற குழப்பம்தான்


Nellai Ravi
ஜூன் 13, 2024 15:23

இது நீட் தேர்வின் தவறு அல்ல. அந்த கல்லூரியின் திருட்டு தானம். புகார் கொடுங்கள், மேனேஜ்மென்ட் குரோட்டோவிற்கும் நீட் பாஸ் செய்திருக்க வேண்டும் .


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 13, 2024 15:05

இது கண்டிப்பாக மாணவர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். அனைத்து கேள்விகளும் சரியாக எழுதி இருந்தும் இந்த ஒரு கேள்வியால் பிரச்சினை என்றால் மீண்டும் பரீட்சை எழுதுவது அவர்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்.நன்றாக எழுதாத தேர்ச்சி ஆகாத மாணவர்களுக்கு இது ஒரு பெரிய பாதிப்பு இல்லை.ஆனால் ஏறக்குறைய மற்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடை எழுதி தேர்ச்சி ஆகி இருந்தால் உண்மையில் இது ஒரு அநீதி ஆகும்.


பாமரன்
ஜூன் 13, 2024 14:45

கர்நாடகாவில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன அவர்கள் ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள் அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார் அங்கிருந்து மருத்துவம் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார் அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார் அவர்களும் ரேங்க் வாங்கி பாஸ் ஆகிறார்கள் அவர்களிடம் கவுன்சிலிங் எங்கே வேண்டும் என்று கேட்டால் சித்தார்த்தா காலேஜையே சொல்கிறார்கள் முதல் ரவுண்ட் கவுன்சிலிங் வருகிறார்கள் அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் வாங்கிக்கொள்ளுகிறார்கள்.. ஆனால் சேராமல் விடுகிறார்கள் இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை அடுத்து இரண்டாம் ரவுண்ட் கவுன்ஸிலிங் வருகிறது அதிலும் அவர்கள் வருகிறார்கள் சேராமல் விடுகிறார்கள் ஆனால் இதற்கு 2 லட்சம் ரூபாய் பைன் கட்ட வேண்டும் இதற்கு ஃபைன் 2 லட்ச ரூபாய் அதையும் ஏஜண்ட் கட்டி விடுகிறார் மூன்றாவது முறையும் சேராமல் விட்டுவிட்டால் அந்த சீட்டுகள் அத்தனையையும் அந்தக் கல்லூரி மேனேஜ்மென்ட்க்கே திரும்பக் கொடுக்கப்பட்டு விடும். இப்போது அத்தனை சீட்களும் கல்லூரியிடமே மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கு ஒப்படைக்கப் படுகின்றன. கல்லூரி மேனேஜ்மென்ட் மொத்தத்தில் எவ்வளவு செலவு செய்கிறது ? 2வது கவுன்ஸிலிங் ஃபைன் 2 லட்சம், மாப் அப் கவுன்சிலிங் பைன் 2 லட்சம், பரீட்சை எழுதிய மானவர்களுக்கு கூலி 2 லட்சம், ஏஜண்ட்டுக்கு 2 லட்சம் ஆக மொத்தம் 8 லட்சம் செலவழிக்கிறது கல்லூரி மேனேஜ்மென்ட்... இப்படி 8 லட்ச ரூபாய் செலவு செய்து சரண்டர் செய்யப்பட்ட சீட்டை 50 முதல் 70 லட்சங்களுக்கு விற்கிறது இதுதான் நீட் தேர்வின் லட்சணம்....


Srinivasan Krishnamoorthi
ஜூன் 13, 2024 14:42

Whether 1563 persons know about their grace marks ?


Svs Yaadum oore
ஜூன் 13, 2024 12:47

சென்ற வாரம் நடந்த TNPSC குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட்டில் முகவரி தவறாக பதிவு செய்யாததால் தேர்வு எழுத முடியாமல் போனதாக பலர் பரிதவிப்பு .... 5 பேரு ஹால் டிக்கெட்டை கிழிச்சி போட்டுட்டாங்க... 50 பேருக்கு மேல ஏமாந்து திரும்பி போய்ட்டாங்க என்று வேதனை தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த இந்த விடியலுக்கு முடியவில்லை ...ஆனால் நீட் நீட் என்று மத்திய அரசை குறை சொல்ல மட்டும் இனிக்கும் ...


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை