உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு

தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை இன்று(ஜூலை 20) வெளியிட்டது. exams.nta.ac.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக, நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட், கடந்த மே 5ம் தேதி நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 67 பேர், 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக் கோரியும், மோசடிகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ffzj5lfh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உச்சநீதிமன்றம் உத்தரவு

'' ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தன் மதிப்பெண் என்ன என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். மற்றவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றனர்? எந்த தேர்வு மையங்களில் அல்லது நகரங்களில் அதிகமானோர் அதிக மதிப்பெண் பெற்றனர் என்பது தெரியாது. இதனால், மதிப்பெண் பட்டியல் அடங்கிய முழு ரிசல்டை, இன்று (ஜூலை 20) மதியம் 12:00 மணிக்குள் என்.டி.ஏ., தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும்'' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

வெளியீடு

அதன்படி, இன்று தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. https://exams.nta.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக நீட் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதன் வாயிலாக, எந்தெந்த தேர்வு மையங்கள் அல்லது நகரங்களில் மோசடி நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

sundarsvpr
ஜூலை 20, 2024 17:52

பள்ளி இறுதி தேர்வில் நல்ல மார்க் பெற்று தேர்ச்சி பெற்ற சிலர் கல்லூரியில் சோபிப்பது இல்லை. காரணம் இவர்கள் தனி பயிற்சி மூலம் மார்க் பெற படிக்கிறார்கள். நிறைய மாணவர்கள் பள்ளியில் ஆசிரியர் கற்பிப்பது மற்றும் டெஸ்ட் புத்தங்களை படித்து தேர்ச்சி பெறுகிறார்கள் இவர்கள் எங்கும் தேர்ச்சி பெறுவர் அர்ஜுனன துரோணரிடம் முறையாய் கற்றான். அதே நேரத்தில் ஏகலைவன் நம்பிக்கையுடன் துரோணரை நினைத்து கற்றான். இரண்டு நபர்களும் சிறந்த வில்லாளிகள். கற்றல் என்பது திறமை. இப்படிப்பட்டவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பு எண்ணம் பெறுவா.


பெரிய குத்தூசி
ஜூலை 20, 2024 16:50

மதிப்பெண் தரவுகள் அடிப்படையில் நாமக்கல் நகரில் 11 நீட் தேர்வு மையங்கள் உள்ளன. நாமக்கல் நகரில் தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 6180ஆகும். 600 மார்க் மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை 760. சந்தேகமாகத் தெரிகிறது. நாமக்கலில் எழுதிய மொத்த 6180 மாணவர்களுக்கு 760 மாணவர்கள் 600 மார்க் மேல் எடுத்துள்ளது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தத்வமசி
ஜூலை 20, 2024 13:56

நீட் தேர்வு வந்த பிறகு தமிழகத்தின் உயர் வகுப்பில் கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என்று கூறலாம். நீட் தேர்வுக்கு முன் குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிக்க அதிகப்படியான வாய்ப்புகள் கிட்டியது. இப்போது எல்லா மாவட்டங்களிலும் ஏழை வீட்டு மாணவர்களும் மருத்துவம் படிப்பதற்கு இலவசமாக வாய்ப்புகள் தானாகவே வீடு தேடி வருகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 20, 2024 13:27

பிளஸ் டூ மார்க் அடிப்படையில் முன்பு தேர்வு செய்யப்பட்ட போது பாதி இடங்களை நாமக்கல் தர்மபுரி சுற்றுவட்டாரப் பள்ளிகளில் பயின்றவர்களே அள்ளியது மறக்காது. அதிலும் ஒரே பள்ளியில் படித்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வானதுண்டு.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை