உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புது வண்ணம்.. புது எண்ணம்.... ஜொலிக்குது அயோத்தி

புது வண்ணம்.. புது எண்ணம்.... ஜொலிக்குது அயோத்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி நகரம், சாலைகள் புதுப்பிக்கப்பட்டு புதுவண்ணங்களால் ஜொலிக்கிறது. சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான சிறப்பு பூஜைகள் இன்று துவங்கியதையடுத்து பழைய கோயில் உள்ள குழந்தை ராமரை இன்று (ஜன. 16) மட்டும் சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். அவர்கள் காலணி அணிந்திருந்தனர். எனினும் அதை கழற்ற வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தி சீல் வைக்கப்படும். உரிய அங்கீகாரம் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என எதிபார்க்கப்படுகிறது.கும்பாபிஷேகத்தை காண ஜன. 21 மற்றும் 22ம் தேதியே பக்தர்கள் கூட்டம் எவ்வளவு இருக்கும் என கற்பனை செய்ய முடியும். அயோத்தியில் தசரத் மஹால், சராயுநதி ஹனுமன் கர்கி உள்ளிட்டவை பார்க்க வேண்டிய இடங்களாகும். நகரில் உள்ள அனைத்து கடைகள், பழைய கட்டிட சுவர்களில் பெயிண்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு முன் சேறும் சகதியுமாக சாலைகள் இருந்தது. இப்போது நம்பமுடியாத அளவிற்கு தூய்மைப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளன.சாலையில் கால்நடைகள் தொந்தரவு, கழிவுகள் போன்றவை இல்லாமல் பயணிக்கலாம். இங்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஆட்டோவில் செல்ல ரூ. 10/- மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது அயோத்தி நகரம் புது வண்ணங்களாலும், புது எண்ணங்களாலும் ஜொலிப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajinikanth
ஜன 16, 2024 22:11

இந்த சுத்தபத்தமெல்லாம் அதிகபட்சம் ஒரு வருடம் தான். எப்படியும் ஊரை நாறடித்துவிடுவார்கள் நம் மக்கள். இப்போது பெரிய கோயில்கள் இருக்கும் ஊரெல்லாம் படு சுத்தமாகவா உள்ளது. அதே நிலை தான் அயோத்திக்கும்


DHESIKAN
ஜன 17, 2024 13:03

பெரிய கோவில் Like Tourist Spot.


ரமேஷ்VPT
ஜன 16, 2024 21:19

ராஜன், பிரியன் ஒன்றை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், இல்லை கடமை பட்டுள்ளேன். ராமர் ராமர் என்று அவர்கள் சொல்லி அரசியல் பிழைப்பு நடந்துகிறார்கள் சரி, அது ஹிந்துக்களின் நம்பிக்கை, மற்றும் தெய்வம் அதை கொண்டாடுவதும் அந்த நம்பிக்கை என்னவென்று எங்களது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும் எங்களுடைய கடமை. இதில நீங்கள் யார் தலை இடுவதற்கு, இதையே மற்ற மதத்தவர்கள் எங்களை இழிவு படுத்தி பேசும்போது நடுநிலைமையான நீங்கள் அப்போ வாய் திறக்காமல் மௌனமாக இருந்தீர்களே என்ன அவர்களிடம் காசு வாங்கிவிட்டிர்களா? இல்லை நீங்களும் மதம் மாறிவிட்டீர்களா? நீங்கள் மதம் மாறிக்கொள்ளுங்கள் எங்களுக்கு வெறுப்போ, கோபமோ இல்லை ஆனால் எங்களையோ, எங்கள் கடவுளையோ, எங்கள் மதத்தையோ உங்களை போன்ற களவாணிகள் எங்களை பற்றி பேச உரிமை இல்லை, கேவல பிறவிகள் நீங்கள். நாங்கள் எந்த மதத்தையும் குறை சொல்லவில்லை. இதற்குண்டான விளைவுகள் உங்களுக்கும் நன்றாகவே தெரியும் என நினைக்கிறன்.


g.s,rajan
ஜன 16, 2024 19:28

நமது தேசத்தில் மனிதப் பிறவியில் மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டிய ராமரை இப்படி வியாபாரம் ஆக்கிட்டீங்களே இது நியாயமா ...???ராமர் மீது உள்ள பக்தியை விட வியாபார நோக்கம் தான் தற்போது பெருகிவிட்டது ....


Priyan Vadanad
ஜன 16, 2024 20:03

உங்களுக்கு என்ன வந்துது? நாங்கள் வேறு வழியில்லாமல் ராமரையே வைத்து அரசியல் பண்ணுகிறோம். நாங்கள் அரசியலும் பண்ணுவோம் வியாபாரமும் பண்ணுவோம். அது எங்கள் இஷ்டம். உங்களுக்கு முடிஞ்சா வேறொரு இஷ்ட தெய்வத்தை கொண்டு வாங்க. முடிஞ்சா இது போல செய்து காட்டுங்க. யாருக்கு பவர் ஜாஸ்தின்னு தெரியும்.


Ravichandran,Thirumayam
ஜன 17, 2024 11:12

ஒன்னயத்தான் எல்லாரும் கழுவி கழுவி ஊத்துறானுகள்ள அப்படியும் நீ அடங்க மாட்டியா?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ