உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஸ்டேக் புதிய விதிகள்: இன்று முதல் அமல்; முழு விபரம் இதோ!

பாஸ்டேக் புதிய விதிகள்: இன்று முதல் அமல்; முழு விபரம் இதோ!

சென்னை: நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான 'பாஸ்டேக்' நடைமுறையில் புதிய விதிகள் இன்று (பிப்.,17) முதல் அமலுக்கு வந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4pbeit1r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. சுங்கச் சாவடிகளில் காத்திருப்பை தவிர்த்து, நெரிசலை குறைப்பதற்காக பாஸ்டேக் திட்டம் அறிமுகமானது. இதன்படி மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வங்கிகள், மொபைல் போன் நிறுவனங்கள் வழங்கியுள்ள மின்னணு அட்டைகள், வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளன. வாகனங்கள் சுங்கச்சாவடியை கடக்கும் போது, அங்குள்ள மின்னணு கருவிகள் வாயிலாக, சுங்க கட்டணம் வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பாஸ்டேக் கட்டணம் வசூலிப்பதற்கு என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா புதிய விதிகளை வகுத்துள்ளது. இதனை இன்று முதல் நடைமுறைப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு என்பிசிஐ அறிவுறுத்தியுள்ளது. * அதன்படி, கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர்களின் அடையாளம் மற்றும் முகவரியை பாஸ்டேக் வங்கி கணக்குகளில், முறையாக பதிவு செய்யாத வாகனங்கள் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன. * இதேபோல சேஸ் எண், பதிவு எண்களுக்கு இடையே ஆர்.டி.ஓ. ஆவணங்களில் ஒற்றுமை இல்லாத வாகனங்களும் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளன. * இவ்வாறு பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட வாகனங்களுக்கு இன்று முதல் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. * மேலும் பாஸ்டேக் வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லாத பட்சத்தில், ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே அதனை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். * சுங்கச்சாவடியை கடந்த 10 நிமிடத்துக்குள் கட்டணம் அதில் இருந்து கழித்துக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு ரீசார்ஜ் செய்யப்படாத வாகனங்களும் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டு இரு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. * தற்போது பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய மறந்தாலோ, இருப்பு இல்லாவிட்டாலோ, சுங்கச் சாவடியிலேயே ரீசார்ஜ் செய்யலாம். * வாகன ஓட்டிகள் பயணம் செய்யும் முன் பாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருப்பதையும், போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியம் ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankaranarayanan
பிப் 17, 2025 18:55

இந்த முறை அயல்நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்து நன்றாகவே செய்ய பட்டுவருகின்றது இது நம் நாட்டிற்கு மிக மிக இப்போது தேவை எல்லோரும் வரவேற்றால் நல்லது


சண்முகம்
பிப் 17, 2025 16:25

இப்பொழுது வண்டியை 2 நிமிடம் நிறுத்தி பாஸ்ட் டேக் வேலை செய்ததா இல்லையா என்று சரி பார்க்க 2 ஊழியர்கள். ஹைதர் காலத்து தொழில் நுட்பத்துடன் இது வேற. வேஸ்ட்


ponssasi
பிப் 17, 2025 14:23

இது சுங்கச்சாவடிகளில் பிரச்சனையை அதிகப்படுத்தும் செயல்.


Sivagiri
பிப் 17, 2025 13:44

எல்லாரும் அவனவன் சைட்ல, சே:.ப்டியா - இருந்திடனும் என்று பாக்குறாங்க - இந்த ரூல்ஸ் எல்லாம் மெஷின்கள் மற்றும் ஏஐ - போடுகிற ரூல்ஸ் மாதிரி இருக்கு - மக்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிட்டு போயிடறாங்க போல . . .


CHELLAKRISHNAN S
பிப் 17, 2025 14:42

why fasttag? one dmk flag is enough?


Ganapathy Subramanian
பிப் 17, 2025 18:03

கமிஷனர் சொல்லியிருக்கார், தீயமுக கொடி கட்டினால் டோல் கட்டணம் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டாம் என்று. அதனால்தான் கட்சியினர் தவிர மக்கள் எல்லோரும் கொடி கட்டிக்கொண்டு குற்றங்கள் செய்கின்றனர், ஆட்சிக்கு கேட்ட பெயர் உருவாக்குகின்றனர்.


Ganapathy Subramanian
பிப் 17, 2025 18:02

கமிஷனர் சொல்லியிருக்கார், தீயமுக கொடி கட்டினால் டோல் கட்டணம் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டாம் என்று. அதனால்தான் கட்சியினர் தவிர மக்கள் எல்லோரும் கொடி கட்டிக்கொண்டு குற்றங்கள் செய்கின்றனர், ஆட்சிக்கு கேட்ட பெயர் உருவாக்குகின்றனர்.


ArGu
பிப் 17, 2025 13:17

என்ன கருமம் டா இது?


முருகன்
பிப் 17, 2025 12:59

பகல் கொள்ள என்பது இதுதான்


V வைகுண்டேஸ்வரன்
பிப் 17, 2025 12:43

பாஜக மாடல் பா.. எதுவும் பேசக்கூடாது. காங்கிரஸ் ஆட்சிகளில் போட்ட சாலைகளில் பாஜக ஆங்காங்கே டோல் பூத் கட்டி பணம் வசூலிக்கிறது. இந்த அராஜகம் பற்றி எந்த பாஜக வினரும் எதுவும் பேச மாட்டார்கள்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 17, 2025 13:36

சூப்பர் கோவையில் ஒரு அன்பர் தனது அறக்கட்டளை மூலம் சுமார் இருபது கோடி ரூபாய் செலவில் ஒரு மண்டபம் கட்டி அதை பேரூர் கோவிலுக்கு கொடுத்துள்ளார். அந்த ஒப்படைப்பு விழா பிப்ரவரி ஐந்தாம் நாள் பேரூர் ஆதீனம் தலைமையில் நடந்தது. ஆனால், இப்போது தளபதி ஆட்சியில் இருபது கோடி செலவில் பேரூரில் மண்டபம் திறப்பு என்று பாட்டிலுக்கு பத்து ரூபா அணில் அமைச்சர், மற்றும் துணை முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் புகைப்படங்களுடன் மிகப்பெரிய சுவரொட்டிகள் நகர் முழுவதும்


Karthi Natraj
பிப் 17, 2025 12:39

இதேபோல் பாஸ்ட்டேக் இல் பணம் இருந்தும் செயல்படவில்லை என்றால் டோல் கேட் ஊழியர்கள் பொது மக்களை கேவலமாய் நடத்துவதற்கும், பேங்க் சர்வர் செயல்படாத பொது பொது மக்கள் என்ன செய்ய? NPCI வழி காட்டுமா ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 17, 2025 12:39

கார் போன்ற வாகனங்கள் திருடி செல்லும் போது பாஸ்டேக் கணக்கை வாகன உரிமையாளர் முடக்கி வைத்தால் அந்த வாகனம் ஏதாவது ஒரு சுங்க சாவடி கடக்கும் போது அந்த சுங்க சாவடி கம்ப்யூட்டரில் இது திருட பட்ட வாகனம் என காட்டும் படி சிஸ்டம் செய்தால் திருட பட்ட வாகனங்கள் சுங்க சாவடிகளில் பறிமுதல் செய்ய வசதியாக இருக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 17, 2025 12:34

திரு. நிதின் கட்கரி அவர்கள் எதிர் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த போது சுங்க கட்டணக் கொள்ளை பற்றி பல முறை பேசினார். ஆனால் அவர் ஆளும் கட்சி வரிசைக்கு வந்த பின்னர் கொள்ளையை ஆண்டுக்கு இரண்டு முறை அதிகப்படுத்துகிறார். இனிமேல் அனைத்து வாகனங்களையுமே பிளாக் லிஸ்ட் செய்துவிடுவார்கள் போல இருக்கிறது. இவ்வளவு வசூல் செய்த பிறகும் நெடுஞ்சாலையின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது


visu
பிப் 17, 2025 12:45

எனக்கு தெரிந்து நிதின் கட்கரி தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் என்ன சுங்க கட்டணங்கள் அதிகமாக இருப்பது சாலைகள் பராமரிப்பில் ஒப்பந்ததாரர் களின் சுணக்கம் போன்றவை உள்ளன .அவர் என்று சுங்க கட்டண கொள்ளை பற்றி பேசியதும் இல்லை


Ganesh Subbarao
பிப் 17, 2025 13:08

எந்த தேசிய நெடுஞ்சாலை மோசமாக இருக்கு என்று தரவுகளுடன் சொல்ல முடியுமா? 200 ரூபாய்க்கு மேல கூவக்கூடாது


Sri
பிப் 17, 2025 13:18

நெடுஞ்சாலை தரமாக வேண்டும். காசு தரமாட்டோம்


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 17, 2025 14:13

கருர் திருச்சி, கும்பகோணம் விழுப்புரம் இந்த இரண்டு சாலைகளும் சமீபத்தில் நான் பயணித்தவை. இரண்டும் மோசம்தான். ஆண்டுதோறும் இருபது சதவீத உயர்வுக்கு ஏற்ப சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை