உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூரில் அடுத்த ஆண்டு தேசிய விவசாயிகள் மாநாடு

மைசூரில் அடுத்த ஆண்டு தேசிய விவசாயிகள் மாநாடு

மைசூரு; உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, மைசூரில் அடுத்த ஆண்டு தேசிய அளவிலான விவசாயிகள் மாநாடு நடக்க உள்ளது.மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் கூறியதாவது:உலக விவசாயிகள் தினம் ஆண்டுதோறும், மே 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அடுத்த ஆண்டு மைசூரில் தேசிய அளவிலான விவசாயிகள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்தியா முழுதும் உள்ள விவசாய சங்கங்கள், அவற்றின் தலைவர்கள், விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர்.இம்மாநாட்டில், விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்வது, அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவது பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன. இஞ்சி விலை குவிண்டால் ஒன்றுக்கு 5,000 ரூபாயில் இருந்து 1,600 ரூபாய் ஆக குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்காததால் போராடி வருகின்றனர்.சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் கீழ் உள்ள விவசாய அமைப்புகள், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக் கோரி, வரும் 25 ம் தேதி துவங்கும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடரின் போது, டில்லி - --ஹரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக மாநில அரசு வழங்க வேண்டும். முடா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தப்படுவதை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !