உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்.ஐ.ஏ., - எஸ்.பி., ஆனார் கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி

என்.ஐ.ஏ., - எஸ்.பி., ஆனார் கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி

பெங்களூரு : கர்நாடகா ஐ.பி.எஸ்., அதிகாரி ராகுல்குமார் சகாபுர்வாட், என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு எஸ்.பி., ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமார் சகாபுர்வாட். இவர் மத்திய பணிக்கு தேர்வாகி உள்ளார். அதாவது, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு எஸ்.பி., நியமிக்கப்பட்டு இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்து உள்ளது.மஹாராஷ்டிராவை சேர்ந்த ராகுல்குமார் சகாபுர்வாட், கடந்த 2012 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குழுவை சேர்ந்தவர். துமகூரு, ஹாசன் எஸ்.பி., உட்பட பல பொறுப்புகளை வகித்து உள்ளார். என்.ஐ.ஏ., எஸ்.பி., பதவிக்கு, ராகுல்குமார் உட்பட 3 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் ராகுல்குமாருக்கு அதிர்ஷ்டம் அடித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை