உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதி ராணாவுக்கு மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவல் நீட்டிப்பு: நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு, மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2008ம் ஆண்டு நவ., 26ல், மஹாராஷ்டிராவின் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர். இந்த நாச வேலைக்கு மூளையாக செயல்பட்டவரும், வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்தவருமான தஹாவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rmgca6id&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீண்ட சட்டப்போராட்டத்துக்கு பின் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, நம் நாட்டின் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார். அவரை, 18 நாட்கள் காவலில் எடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர். அவனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது. தஹாவூர் ராணாவின் 18 நாள் என். ஐ. ஏ., காவல் இன்றுடன் முடிந்ததும், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராணாவை மேலும் காவலில் வைத்து விசாரணை நடத்த என். ஐ. ஏ., அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ராணாவுக்கு, மேலும் 12 நாட்களுக்கு என்.ஐ.ஏ., காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணாவிடம் பல உண்மை சம்பவங்களை வெளிக் கொண்டுவர என்.ஐ. ஏ., அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஏப் 28, 2025 22:44

இன்னும் இவன் என்கவுண்டர் செய்யப்படவில்லையா…?


spr
ஏப் 28, 2025 17:51

விசாரணையே தேவையில்லை நேரடியாகத் தூக்குதான் தர வேண்டும். நம் நாட்டு விசாரணை அமைப்பு, நீதிமன்றத் செயல்பாடு மனித நேயம் என்ற போர்வையில் குற்றவாளிக்கு கிடைக்கும் ஆதரவு, சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்துக் குற்றவாளிகளை விடுவிக்க வாதாடும் வழக்கறிஞர்களின் திறமை எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களின் ஆதரவு இவை இருப்பது அறிந்தும் இந்தக் குற்றவாளியை கடுமையானக் கட்டுக்காவல் உள்ள பிறநாட்டுச் சிறையிலிருந்து விசாரணைக்காக இந்தியா கொண்டு வந்ததே தவறு. இது மோடிக்கு விளம்பரமே தவிர பிரச்சினை தீராது. இதுவரை பல குற்றவாளிகளை தப்ப வைத்த நம் நீதித்துறை இவனையும் தப்ப வைக்கும் இவன் பாகிஸ்தானுக்கு ஓடிப் போகலாம் விசா அனுமதியில்லாமல் பல வெளிநாட்டார் இந்தியாவில் இருப்பதே அறியாத உள்துறையும் வெளிநாட்டு உறவு அமைச்சகமும் இருக்கையில், இவனால் மேலும் பிரச்சினைகள் உருவாகலாம்


Sudha
ஏப் 28, 2025 17:25

நாடே பற்றி எரிந்தாலும் நீங்க சம்மர் வகேஷன் போறது நிக்காது, ஜாமூன் வக்கில் முளைப்பாரு மிருக உரிமை ஆணையம் கேள்வி கேட்கும், அவனுக்கு அழைப்பு வந்து விடும்


முக்கிய வீடியோ