உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை!: உயர் பாதுகாப்பு அறையில் வைத்து சரமாரி கேள்வி

பயங்கரவாதி ராணாவிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை!: உயர் பாதுகாப்பு அறையில் வைத்து சரமாரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு தந்த பிரதான குற்றவாளியான பயங்கரவாதி தஹாவூர் ஹுசைன் ராணா, 64, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதை அடுத்து, அவரை, 18 நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. உயர் பாதுகாப்பு உள்ள அறையில் வைத்து, அவரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள், மஹாராஷ்டிராவின் மும்பைக்குள் கடந்த, 2008, நவ., 26ல் புகுந்தனர். அரபிக்கடல் வழியாக மும்பைக்குள் வந்த அவர்கள், ரயில் நிலையம், இரண்டு ஹோட்டல்கள், யூதர்கள் மையத்தில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 166 பேர் உயிரிழந்தனர்; 238 பேர் காயம் அடைந்தனர்.தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் போலீசிடம் சிக்கினான். அவனுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சட்ட போராட்டம்

இந்த நாசவேலைக்கு மூளையாக செயல்பட்ட, வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானியரான தஹாவூர் ஹுசைன் ராணா பற்றிய தகவல், என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இவர், மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டதில் முக்கிய பங்கு வகித்ததும், 2008ல் மும்பைக்கு நேரடியாக வந்து, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்த விபரமும் தெரிந்தது.இதைத் தொடர்ந்து, தஹாவூர் ராணா அமெரிக்காவில் வைத்து, 2011ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வர நம் வெளியுறவுத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், கடந்த 9ம் தேதி, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார்.அவரை தனி விமானத்தில் அதிகாரிகள் டில்லி அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு விமானம் டில்லியில் தரையிறங்கியது. பலத்த பாதுகாப்புடன் டில்லியில் உள்ள என்.ஐ.ஏ., தலைமையகம் அழைத்துச் செல்லப்பட்ட ராணா, நேற்று முன்தினம் இரவு, பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜித் சிங் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். நீதிமன்றத்தை, 'ஸ்வாட்' எனப்படும், சிறப்பு ஆயுதங்கள் மற்றும் தந்திரப்படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

18 நாட்கள்

மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்தர் மான் ஆகியோர் என்.ஐ.ஏ., தரப்பில் ஆஜராகினர். ''உங்கள் தரப்பில் ஆஜராகப் போவது யார்?'' என, ராணாவிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.''யாரும் இல்லை,'' என, ராணா பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் பியுஷ் சச்தேவா ராணா தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டவர் என்ற முறையில், சதி பின்னணி குறித்து ராணாவிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக என்.ஐ.ஏ., தரப்பு தெரிவித்தது. அவரை, 20 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.அவரை, 18 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் டில்லி சி.ஜி.ஓ., வளாகத்தில் உள்ள என்.ஐ.ஏ., தலைமையகத்துக்கு ராணா அழைத்துச் செல்லப்பட்டார்.அங்குள்ள உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்கா பாராட்டு

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டேமி புரூஸ் நேற்று முன்தினம் கூறியதாவது:அதிபர் டிரம்ப் கூறியது போல, மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவளித்து வருகிறது. உலகப் பேரிடரான பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அமெரிக்கா - இந்தியா இணைந்து செயல்படும். ராணாவை நாடு கடத்த இந்தியா எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவ்வாறு அவர் கூறினார்.

கை, கால்களில் சங்கிலி

அமெரிக்கா சென்ற நம் வெளியுறவுத்துறை மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் கடந்த, 9ம் தேதியன்று அமெரிக்க விமானப்படை தளத்தில் வைத்து ராணா ஒப்படைக்கப்பட்டார்.அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், கை - கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, கைதிகளுக்கு வழங்கப்படும், 'பிரவுன்' நிற உடையில், முழுதுமாக நரைத்த தலைமுடி, தாடியுடன் ராணா காட்சியளிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

MARUTHU PANDIAR
ஏப் 12, 2025 15:50

வயதானால் முடி நரைக்காதவர் யார் ? ஆனால் மனத்தில் குரூரம்,கொடூரம் , இன வெறி, இவை எல்லாம் இந்த நிமிடம் வரை கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கும் .அதற்கு வயது ஒரு தடையல்ல . ஆனால் இவனுக்கு வாதாடப் போகும் வக்கீல்மார்கள் "நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. அவருடைய வயதை கருத்தில் கொண்டு எங்கள் கட்சிக்காரருக்கு அதிக பட்ச தண்டனையிலிருந்து வில க்கு கொடுக்க வேண்டும்" என்று வாதாடுவாங்க. குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.குறித்து வைத்துக் கொள்ளுங்கள்


jgn
ஏப் 12, 2025 08:32

The terrorist name Rana is purely Sanskrit root name by his ancestor , is master mind to facilitate to kill 166 innocent people in India, it is painful to note .


பெரிய குத்தூசி
ஏப் 12, 2025 08:12

இனிமேல்தான் வக்கீல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் MP வக்கீல் கல் கப்பில் சிம்பிள், அபிஷேக் சிங்வி இந்த தீவிரவாதிக்கு ஆதரவாக ஆஜர் ஆவர்கள்.


Kasimani Baskaran
ஏப் 12, 2025 07:43

நல்ல உபசரிப்பில் நெகிழ்ந்து விடப்போகிறான்... அதன் பின்னர் நாலு காங்கிரஸ்காரர்களை காட்டிக்கொடுக்க வாய்ப்பு இருக்கிறது..


MARUTHU PANDIAR
ஏப் 12, 2025 06:00

இவன் ஒரு விஷயத்த்தை மட்டும் சரியாக புரிந்து கொள்ள வில்லை . அமெரிக்காவிலேயே இருக்கிறேன் , இந்திய சிறையில் என்னை கொன்று விடுவார்கள் என்று புலம்பியிருக்கிறான் . இங்கு இவனுக்கு கிடைக்கும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி மற்றும் அந்நிய கைக்கூலிகள் வானளாவிய சப்போர்ட் , வருடக் கணக்கில் தின்னப் போகும் வாய்க்கு ருசியான பிரியாணி இதெல்லாம் பார்த்து விட்டு "சே சே நம்ப தான் தப்பா நெனச்சுட்டோம். இங்க தான் உண்மையில் சொர்க்கம் போல இருக்கு" அப்படீங்கப் போறான்.


MARUTHU PANDIAR
ஏப் 12, 2025 05:52

முதலில் ராணா என்று தயவு செய்து நம் நாட்டு ஹீரோ பெயரில் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் . பாகிஸ்தானின் ஆளு ,பாகிஸ்தான் கொடுத்த வேலையை செய்திருக்கான் என்பதில் ஐயம் ஏது ? சீனா துணை இருக்கும் வரை பாகிஸ்தானுக்கு கவலை இல்லை . இந்த பதறல் எல்லாம் வெறும் வேஷம் .


RAJ
ஏப் 12, 2025 03:24

விஷயத்தை கக்க வையுங்கள் ஆபிசர்ஸ் ..


Arul. K
ஏப் 12, 2025 09:00

அவனுக்ககே மறந்துபோயிருக்கும்


மீனவ நண்பன்
ஏப் 12, 2025 02:59

தனி விமானத்தில் அதிகாரிகள் டில்லி அழைத்து வந்தனர்..தனி விமானம் போக வர நான்கு கொடிகள் செலவாகும் ..ராஜ மரியாதை ஜெயிலில் பிரியாணி ஆப்பிள் ஜூஸ் தான் அவருக்கு சரிப்பட்டு வரும்


Venkatesan Srinivasan
ஏப் 12, 2025 22:51

தங்கள் நாட்டின் எதிரிகளை தீவிரவாதிகளை எதிர் கொள்வதில் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா, சீனா, மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளின் பாணியே தனி. இதனால் தான் சாமானியமாக அந்த நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகள் தலைதூக்குவது கிடையாது. அந்த நாட்டில் எதிரிகள் தீவிரவாதிகள் அகப்பட்டால் அவர்கள் அனுபவித்த பலன்களை " டாக்குமெண்டரி" எடுத்து வெளியிடுவார்கள். அதனை பார்த்த எவனும் கண்டிப்பாக துணிய மாட்டான். பயங்கரவாதத்தை கருவறுப்பதில் சிறிதும் சுணக்கம் காட்டலாகாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை