உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிதிஷ் மீண்டும் முதல்வராக முடியாது: பிரஷாந்த் கிஷோர் சாபம்

நிதிஷ் மீண்டும் முதல்வராக முடியாது: பிரஷாந்த் கிஷோர் சாபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை, மீண்டும் முதல்வராக பா.ஜ., அனுமதிக்காது,'' என, தேர்தல் வியூக நிபுணரும், அரசியல் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள பீஹார் சட்டசபை தேர்தலில், பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி: கட்சி விரும்பினால், பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை எதிர்த்து போட்டி யிடுவேன். முதல்வர் நிதிஷ் குமாரின் மோசமான நிர்வாகத்தால், பீஹார் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர் தன்னுடைய கடைசி அரசியல் ஆட்டத்தில் உள்ளார். அவர் மீண்டும் முதல்வராக பா.ஜ., அனுமதிக்காது. வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணி தோல்வியை தழுவும். அதனால், வரும் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே அவர் முதல்வராக இருப்பார்.அரசு நிர்வாகத்தில், நிதிஷ் செயலிழந்து விட்டார். அதிகாரிகளும், நெருங்கிய அரசியல் நண்பர்களும் சேர்ந்துதான் ஆட்சியை நடத்துகின்றனர். மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே அவருக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sampath Kumar
ஏப் 11, 2025 13:38

அய்யா கிஷோர் உன்னக்கு ... சரியாய் தெரிய வில்லை நீ தான் காணமல் போக போகிறாய் ஏன் என்றால் நீ சேர்ந்த இடம் அப்படி


rama adhavan
ஏப் 11, 2025 12:08

இவர் இப்போது அரசியலில் பண மதிப்பு இழந்தவர். செல்லாக் காசு. யாரும் மதிப்பது இல்லை. இவரது கட்சியும் போணி ஆகவில்லை.


ராமகிருஷ்ணன்
ஏப் 11, 2025 11:23

தமிழகத்திற்கு செய்த மகா பெரும் பாவத்திற்கு தண்டனை அடைந்தே தீருவார்.


Sathyan
ஏப் 11, 2025 10:26

நல்ல மக்கள் சாபம் குறிப்பாக தமிழர்களின் சாபம் இவனையும் இவனை சார்ந்தவர்களையும் வாழ விடாது, கோடி கோடியாக சாபம் பெற்ற பணத்தை வைத்து என்ன செய்யபோகிறானோ ?


Thetamilan
ஏப் 11, 2025 10:17

சந்தர்ப்பவாதிகளை நாடு எப்போதும் கண்டதில்லை


sankaranarayanan
ஏப் 11, 2025 09:56

பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை, மீண்டும் முதல்வராக பா.ஜ., அனுமதிக்காது, என, தேர்தல் வியூக நிபுணரும், அரசியல் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார் இவர்தான் சாணக்கியர் இவர் இருக்கும் இடமே இனிமேல் தெரியாமல் போயிடும் திரும்பவும் பீஹாரில் பா.ஜ.க ஆட்சியே வரும்


S. Venugopal
ஏப் 11, 2025 09:50

உங்களுக்கு முன் பல பீஹார் மக்கள் எல்லா வளம்களையும் பெற்று உள்ள மேலும் அறிவுத்திறன் அதிகம் உள்ள மற்றும் உழைக்க தயாராக உள்ள மக்கள் உள்ள பீகார் முன்னேறக்கூடாது என்று உன்னைப்போல் சாபம் கொடுத்துள்ளார்கள் அவர்கள் சாபம் பலிக்க மண்புமிகு நிதிஷ் குமார் அவர்கள் தான் நீடிப்பார்


Raj
ஏப் 11, 2025 06:39

இப்படியே ஊரு ஊராய் போய் அரசியல் ஜோதிடம் சொல்லியே காசு அடிச்சுடறான். இவன் ஒரு கட்சி ஆரம்பிச்சான் அது என்னாச்சுனே தெரியல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை