உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி மீது 25 காசு அளவிற்கு கூட குற்றச்சாட்டு இல்லை: அமித்ஷா பேச்சு

பிரதமர் மோடி மீது 25 காசு அளவிற்கு கூட குற்றச்சாட்டு இல்லை: அமித்ஷா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ''23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் மீது 25 காசு அளவிற்கு கூட ஒரு குற்றச்சாட்டும் இல்லை'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.துர்காபூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராமர் கோயில் பிரதிஸ்டை விழாவிற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனாலும் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என பயந்து அவர்கள் ராமர் கோயிலுக்கு செல்லவில்லை. ஊடுருவல்காரர்களின் ஓட்டு வங்கிக்காக மம்தா பயப்படுகிறார். பா.ஜ.,வை வீழ்த்த துர்காபூரில் 15 நாட்களாக மம்தா பிரசாரம் செய்து வருகிறார். இங்கேயே 5 ஆண்டுகள் தங்கியிருந்தாலும், துர்காபூரில் மம்தா வெற்றிப்பெற முடியாது என சவால் விடுக்கிறேன். தொழில்துறை நகரமான துர்காபூரில் ஒரு புதிய குற்றத் தொழிலை துவங்கியுள்ளார் மம்தா. இண்டியா கூட்டணியினர் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளனர். மம்தாவின் அமைச்சர்களின் வீடுகளில் இருந்து ரூ.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.350 கோடி ரொக்கம் மீட்கப்பட்டது. நேற்றிரவு ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சரின் வீட்டில் ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக மோடி முதல்வராகவும், பிரதமராகவும் இருந்துள்ளார். அவர் மீது 25 காசு அளவிற்கு கூட ஒரு குற்றச்சாட்டும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்புசாமி
மே 07, 2024 07:24

உங்க முதுகில் உள்ள அழுக்கை அடுத்தவன் பாத்து சொல்லணும். சொல்லுவான்.


Nagercoil Suresh
மே 07, 2024 03:27

இருபத்தைந்து காசு செல்லாது அதை வைத்து எப்படி அளவிட முடியும் அதேபோல் பழைய அரசியல்வாதிகளும் இளைஜர்களுக்கு வழிவிட வேண்டும்


Thirumal s S
மே 06, 2024 21:24

ஆமாம் லட்ச கோடிகளில் தான் சொல்ல வேண்டும்


venugopal s
மே 06, 2024 20:17

தொழில் அவ்வளவு சுத்தமாக செய்து இருக்கிறோம் என்கிறாரா?


தாமரை மலர்கிறது
மே 06, 2024 19:13

ஹாநெஸ்ட் மேன் என்று ஆக்ஸ்போர்ட டிக்ஸ்னரியில் தேடினால், மோடி என்று தான் வரும்


Bahurudeen Ali Ahamed
மே 06, 2024 19:12

மோடி அவர்கள் தன்னிடம் வீடு கூட இல்லையென்று பொய் கூறுகிறார், அது ஒருபுறம் இருக்கட்டும், மோடியை முன்னிறுத்தி கார்ப்பரேட் கம்பெனிகள், பணக்கார முதலாளிகள், அமைச்சர்கள் கொள்ளையடிக்கின்றனர் மோடி செய்யவில்லை ஆனால் அனுமதிக்கிறார் பொதுத்துறை நிறுவனங்களை விற்க வேண்டிய அவசியம் என்ன, மேலும் பல லட்சம் கோடிகள் கடன் பெற்று மக்களுக்கு செய்ததென்ன


Anantharaman Srinivasan
மே 06, 2024 19:05

தமிழ்நாடு ஊழலில் எறும்பும் கரையானும் கூட மாட்டியது எங்க கருணாநிதி கடைசிவரை மாட்டவில்லை அதற்காக கலைஞர் ஊழலே செய்யவில்லையென்று ஆகி விடுமா? உன் சகாக்கள் யாரென்று சொல் உன்னைப்பற்றி சொல்கிறேன் என்பது நடைமுறையில் உள்ள பேச்சு


K.n. Dhasarathan
மே 06, 2024 18:04

ஏன் ? கோடி மதிப்பு தனி விமானம் வைத்துள்ளார், வெளி நாட்டு கார், வெளிநாட்டு துணி வகைகள் நமக்கு மட்டும் மேக் இந் இந்தியா, நிநாய்த்தபோதெல்லாம் வெளி நாட்டு பயணம் , பாராளுமன்றத்திற்கு வர தேவையில்லை,


Venkat, UAE
மே 06, 2024 19:37

தனி விமானம் மற்றும் பாதுகாப்புகள் கொண்ட வெளிநாட்டு கார் எல்லாம் மோடி என்ற தனி நபரின் சொத்து அல்ல, இதெல்லாம் இந்திய பிரதமர் உபயோகப்பூடுத்துவதற்கானது மோடிக்கு பின்னர் வரும் அடுத்த பிரதமரும் உபயோகிப்பார்கள் இந்த அடிப்படை கூட தெரியாமல் காழ்ப்புணர்ச்சியை கொட்டாதீர்கள்


முருகன்
மே 06, 2024 17:36

மக்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்தீர்கள் என்பதே கேள்வி


Raja
மே 06, 2024 17:34

எல்லாமே கோடி ரூபாய் மதிப்பு கொண்ட குற்றாசாட்டுதான் உள்ளது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை