உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாட்டிற்கு இப்போ வராதீங்க...: சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் போலீசார்

வயநாட்டிற்கு இப்போ வராதீங்க...: சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பும் போலீசார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் சூரமலை மற்றும் முண்டக்கை பகுதிகளை பார்வையிட வருபவர்களை, போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். வயநாட்டிற்கு யாரும் வர வேண்டாம் என மாநில அரசும், போலீசாரும் அறிவுறுத்தி உள்ளனர். மீட்புப் பணி இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, பலர் வயநாட்டிற்கு வர துவங்கி உள்ளனர். இது மீட்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.மீட்புப் படையினர், பத்திரிகையாளர்கள், தன்னார்வலர்களை மட்டுமே வயநாடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மீட்புப்படையினர் தவிர்த்து மற்றவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சோதனைச்சாவடிகளில், இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்களை திரும்பிச் செல்ல அறிவுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 06, 2024 21:27

வயநாட்டில் இவ்வளவு பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கு. இன்னும் மீட்புப்பணியில் ராணுவம் செயல்படுகிறது. இந்த நேரத்தில் யாராவது அங்கு சுற்றுலா போக நினைப்பார்களா ? உண்மையில் அவர்களுக்கு தலையில் அது உள்ளதா?


Ram pollachi
ஆக 06, 2024 14:23

உங்கள் சேவகன் எப்போதும் உதவ தயார் என்று சொல்லி ஓட்டு வாங்கி ஜெயித்து பல சலுகைகள் அனுபவிக்கும் மக்கள் பிரதிநிதிகள் மட்டும் வயநாடு போயி உழைத்தால் பாராட்டலாம், கொண்டாடலாம்...


Ram pollachi
ஆக 06, 2024 14:10

ரோட்டில் ஒரு பூனையோ, நாயோ செத்து கிடந்தால் மூக்கை பொத்திக்கிட்டு ஓடிவிடுவார்கள் அல்லது பஞ்சாயத்து ஊழியரிடம் சொல்லி அப்புறபடுத்துவார்கள்... நிலைமை இப்படி இருக்க காவு வாங்கி கொத்து கொத்தாக இறந்தவர்களை தன்னார்வலர்கள் என்னத்தை செய்வார்கள்? அதை எல்லாம் பார்த்தால் தூக்கம் வராது, பசி வந்தாலும் சாப்பிட முடியாது, வீட்டில் வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்ய துப்பு இல்லை....


SUBRAMANIAN P
ஆக 06, 2024 13:38

எங்க பார்த்தாலும் வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் அலையுது. அப்படி வேடிக்கை பார்க்க வந்தா அவங்களையும் பிடிச்சு முண்டக்கைல முக்கி எடுங்க போலீஸ்... அது சரி... இந்த பிஹைண்ட் வூட்ஸ் ன்னு ஒருத்தன் எங்கயும் புகுந்திடுவானே . அவன் போகலையா வயநாட்டுக்கு.


தமிழ்செல்வன்
ஆக 06, 2024 14:00

சரியாய் சொன்னிர்கள் தோழரே


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி