உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: கள ஆய்வுக்கு அனுமதித்த உத்தரவு நிறுத்திவைப்பு

கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: கள ஆய்வுக்கு அனுமதித்த உத்தரவு நிறுத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி நிலம் சர்ச்சை தொடர்பான வழக்கில், களஆய்வு செய்வதற்கு, அனுமதி அளித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.உத்தர பிரதேசத்தின் மதுராவில், கடவுள் கிருஷ்ணன் பிறந்ததாகக் கூறப்படும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இங்குள்ள கிருஷ்ணர் கோவிலை ஒட்டி, ஷாஹி மஸ்ஜித் இத்கா என்ற மசூதி அமைந்துள்ளது. முகலாய ஆட்சியின்போது இங்கிருந்த ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, இந்த மசூதி கட்டப்பட்டுள்ளதாக நீண்டகாலமாக சர்ச்சை உள்ளது. கடந்த, 1968ல், ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சன்ஸ்தான் மற்றும் ஷாஹி மஸ்ஜித் இத்கா அறக்கட்டளை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சர்ச்சைக்குரிய நிலத்தில், 10.9 ஏக்கர் நிலம் கோவிலுக்கும், மீதமுள்ள, 2.5 ஏக்கர் நிலம் மசூதிக்கும் பிரிக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k4u94jlo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால், மொத்த பகுதியும் கோவிலுக்கு சொந்தமானது என, ஹிந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரா நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 18 வழக்குகள், அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. மசூதி இடத்தில் களஆய்வு செய்வதற்கு உத்தரவிடக் கோரி, ஹிந்துக்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த மதுரா நீதிமன்றம், அனுமதி அளித்தது. இதை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரா கோவிலிலும் கள ஆய்வு நடத்துவதற்கு அனுமதித்து உத்தரவு பிறப்பித்தது.இதனை எதிர்த்து முஸ்லிம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று வந்த போது, மசூதியில் கள ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் வரை, மசூதியில் ஆய்வு செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

GMM
ஜன 16, 2024 18:34

இரு நீதிமன்றத்தில் கள ஆய்வு ஏற்பு. உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பு. அம்பேத்கர் அச்சம் கொண்டு கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு கேட்டார்? கட்சிகள் அச்சமின்றி ஓட்டுக்கு கல்வி, வேலை, அரசியலில் இட ஒதுக்கீடு நிலை நிறுத்தி விட்டன. நிச்சயம் மத சிறுபான்மை அந்தஸ்துக்கு ஒரு எல்லை வகுத்து இருப்பார். சிறுபான்மை மக்கள் தொகை எல்லை தாண்டி நின்றும், கருத்து கூற அனைவருக்கும் அச்சம். வீடு, கோவில், நாடு பூர்விக மக்களுக்கு பாத்தியப்படுவது மரபு. கிருஷ்ண ஜென்ம பூமி கோவிலுக்கு பாத்தியப்பட்டது.


GMM
ஜன 16, 2024 18:19

பூர்விக இடத்தை விட்டுக்கொடுக்கும் பழக்கம் உண்டு. கோவில், மசூதி சுமார் 5 ல் 1 பகுதி உள்ளூர் பிரிப்பு தவறு. கோவில் இடம் சக்தி வாய்ந்தது. மாற்ற முடியாது. கோவில் வழிபாடு முறை வேறு. சர்ச், மசூதி முறை வேறு. இரண்டும் அருகில் கூடாது. இந்திய இஸ்லாம் மக்கள் பெரும்பாலும் இந்து பெண்கள் வாரிசுகள்.? இந்துக்கள் ஒடுக்க பட்ட மக்களை உயர் பதவிக்கு ஏற்று கொண்டனர். இஸ்லாமிய, கிருஸ்துவ மத நாடுகள் மதம் மாறிய இந்திய மக்களுக்கு முக்கியதுவம் அளிப்பது இல்லை? குடியேறிய நாடுகளுடன் இணைந்து வாழ்வது இனி கட்டாயம். சிறந்தது.


Priyan Vadanad
ஜன 16, 2024 20:07

அடப்பாவமே. கிறிஸ்தவ நாடுகளில் எத்தனை எத்தனை இந்து கோவில்கள் உண்டு தெரியுமா? அவர்கள் எத்தனை சுதந்திரத்துடன் கோவிலில் வழிபடுகிறார்கள் தெரியுமா? இந்து பெண்களை பற்றி உங்கள் கருத்து ஏற்புடையதல்ல.


Mohan
ஜன 16, 2024 18:16

மக்கள் சாப்பாட்டுக்கு திண்டாடும் போது இது மாதிரி கள ஆய்வு தேவையா என்று சொல்ற மனிதரே, பேனா சிலை, நூற்றாண்டு விழா, இளைஞர் எழுச்சி மாநாடு தேவையா? கட்சியினர் காசு பார்க்க நிறைவேற்றிய 4000 கோடி எள்ளும் தண்ணீருமாக ஓடிய, சென்னை மக்களை வெள்ளத்தில் நாற விட்ட மழைநீர் வடிகால் தேவையா? நண்பரே, ஏற்கனவே பப்பு. மெய்னா,வத்ரா காந்தி வகையறாக்கள் வக்பு போர்டுக்கு சட்டத்தை ஏமாற்றி தாரை வார்த்த அரசு மற்றும் தனியார் நிலங்கள் போதாதா? கோயில் நிலங்களும் உரிமைகளும் வந்தேறிகள் செய்த ஆக்ரமிப்புகள் எல்லாவற்றையும் விட்டுத்தரும் அளவுக்கு அவர்கள் நம்ம தேசத்திற்கு எந்த நன்மையும் செய்ததில்லை, குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் என வித்தியாசம் பார்க்காமல் படுகொலை செய்தது மற்றும் மத மாற்றம் செய்தது தான் அவர்கள் செய்த சாசனைகள். இந்தியா இன்னமும் துண்டு துண்டாக போகாமல் இருப்பதற்கு இந்தியர்களின் இந்துக் கடவுள் நம்பிக்கையும் அதனுள் இருக்கும் கோயில்களுமே காரணம்..


வெகுளி
ஜன 16, 2024 15:52

ஆய்வு செய்யாமல் எப்படி உண்மை தெரியும்? எப்படி சுமூகமான முடிவெடுக்க முடியும்?


கனோஜ் ஆங்ரே
ஜன 16, 2024 13:38

அவனவன் சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடிட்டிருக்கான்... இவனுங்களுக்கு வேற வேலையே இல்ல போலிருக்கு...? “தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்”...னு சொன்னார் மகாகவி பாரதி... மக்களுக்கு சோத்துக்கு வழி செய்யாம.. விவசாயிகள் வயித்தில் அடிப்பதையும், தொழிலாளிகள் வாழ்க்கையில் அடிப்பதையும், வணிகர்களின் அடிவயித்தில் கைவைப்பதையும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல்... இது ரொம்ப முக்கியமாக்கும். இதுலந்து என்ன தெரியுது... வேலைவெட்டியில்லாமல் இருக்குறானுங்க..ன்னு தெரியுது. வேலை வெட்டி இருந்தா... அவனுக்கு தான் செய்யும் வேலைமீது மட்டுமே கவனம் செல்லும். பொண்டாட்டி, புள்ளக்குட்டியக்கூட கவனிக்க மாட்டான்... வெத்துவேட்டுகள், திண்ணை தூங்கிகள், சோம்பேறிகள், தண்டங்கள் அதிகமாக இருக்குறதால... இதுபோன்ற எண்ணங்கள் பேயாய் மனதிற்குள் வந்து பிறாண்டும். அதன் விளைவே இது...


ஆரூர் ரங்
ஜன 16, 2024 15:25

அதையேதான் நானும் கேட்கிறேன். சோற்றுக்கே திண்டாடும் மக்கள் இருக்க பேனா சிலைக்கு அவசரம் ஏன்? மணிமண்டபம் ஏன்? ஆளே வாராத???? கலைஞர் நூற்றாண்டு விழா எதற்கு?


Karmegam,Sathamangalam
ஜன 16, 2024 15:25

மறைச்சுக்கிட்டாலும் நீ யாருன்னு தெரிஞ்சுருது நான் கொண்டையை சொன்னேன்.


Hari
ஜன 16, 2024 15:50

நாடு முக்கியம் தலைவா


Dharmavaan
ஜன 16, 2024 16:08

சோத்துக்கு திணடாடுவதே இந்த திருடர்களின் ஊழலால் நம் உரிமைகளை கூறுவதானால் இல்லை


ஆரூர் ரங்
ஜன 16, 2024 13:33

மற்றவர்கள் உரிமை கோரும் இடங்களில் தொழுகை செய்ய வேண்டாம் என்பது அந்த மதத்தின் புனித கோட்பாடு????. விட்டுக் கொடுத்தலே நல்லது.முதன்முதலாக வணிகத்திற்காக இஸ்லாமியர் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களது பள்ளிவாசல்கள் கட்ட இடமும் பொருளுதவியும் அளித்து உதவியது ஹிந்து மன்னர்கள்தான்.


கனோஜ் ஆங்ரே
ஜன 16, 2024 14:01

வந்துட்டாருப்பா...


naranam
ஜன 16, 2024 14:39

அந்த ஹிந்து மன்னர்கள் செய்த தவறு தான் இப்பொழுது பெரிய பிரச்சனையாகி விட்டதோ!


Dharmavaan
ஜன 16, 2024 16:10

பாம்புக்கு பால் வார்த்ததை போல்தான்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ