உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலில் விழுந்தும் பிரயோஜனம் இல்லையே விஜயேந்திரா மீது பா.ஜ., - எம்.எல்.ஏ., வருத்தம்

காலில் விழுந்தும் பிரயோஜனம் இல்லையே விஜயேந்திரா மீது பா.ஜ., - எம்.எல்.ஏ., வருத்தம்

பீதர், - மத்திய ரசாயன துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா. பீதர் தொகுதி எம்.பி.,யான இவருக்கும், பீதரின் அவுராத் எம்.எல்.ஏ., பிரபு சவுஹானுக்கும் மோதல் போக்கு உள்ளது. கூலிப்படை ஏவி தன்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல, பகவந்த் கூபா திட்டம் தீட்டியதாக, பிரபு சவுஹான் 'பகீர்' குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பீதரில் நடந்த கட்சி கூட்டத்தின் போது, 'பகவந்த் கூபாவுக்கு மீண்டும் சீட் வாங்கி தராதீர்கள்' என்று, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா காலில் பிரபு சவுஹான் விழுந்தார்.ஆனாலும், நேற்று முன்தினம் வெளியான பா.ஜ., பட்டியலில், பீதர் தொகுதியில் பகவந்த் கூபா பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால், பிரபு சவுஹான் கடும் அதிருப்தி அடைந்து உள்ளார்.விஜயேந்திராவும், பகவந்த் கூபாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். பிரபு சவுஹான் எஸ்.சி., ஆவார். எம்.எல்.ஏ., காலில் விழுந்ததை கூட பொருட்படுத்தாமல், தன் ஜாதிகாரருக்கு விஜயேந்திரா சீட் வாங்கி கொடுத்து இருப்பதாக, பிரபு சவுஹான் ஆதரவாளர்கள் விரக்தி தெரிவித்தனர்.

தாய் சமாதியில் வழிபாடு

பீதர் தொகுதியில் சீட் கிடைத்த மகிழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் பகவந்த் கூபா, டில்லியில் இருந்து, ஹைதராபாத் வழியாக நேற்று காலை பீதருக்கு வந்திறங்கினார். தெலுங்கானா எல்லையில், அவரது ஆதரவாளர்கள், தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.அங்கிருந்து ரேஜந்தல் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று, பூஜை செய்தார். அதன்பின், தன் தாயின் சமாதிக்கு சென்று வழிபட்டார். இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ