உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தாந்தத்தால் இணையவில்லை!

சித்தாந்தத்தால் இணையவில்லை!

எதிர்க்கட்சியினர் பா.ஜ.,வில் இணையும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. அவர்கள் பா.ஜ.,வின் சித்தாந்தம் பிடித்ததால், அக்கட்சியில் இணையவில்லை. அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ.,க்கு பயந்து இணைகின்றனர்.

சுப்ரியா சுலே, லோக்சபா எம்.பி., தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு

ஆட்சி நீடிக்காது!

லோக்சபா தேர்தலில் ஊழலும், அராஜகமும் மிக்க திரிணமுல் காங்கிரசை வீழ்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் பா.ஜ., ஒரு சீட் கூடுதலாக பெற்றாலும், திரிணமுல் காங்., ஆட்சி 2026 வரை நீடிக்காது.

சுகந்தா மஜும்தார், தலைவர், மே.வங்க பா.ஜ.,

பிரிவினையை உருவாக்குகிறார்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், சி.ஏ.ஏ., சட்டத்தின் பெயரில் போலியான தகவல்களை பரப்பி மதவாத பிரிவினையை உண்டாக்க முயற்சிக்கிறார். முஸ்லிம்கள் குறி வைக்கப்படுவதாக கூறுகிறார். இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அவரிடம் உள்ளதா?

சுரேந்திரன், தலைவர், கேரள பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ