உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இனி ரயில்வே போலீசாரும் டிக்கெட் இன்றி செல்ல முடியாது

இனி ரயில்வே போலீசாரும் டிக்கெட் இன்றி செல்ல முடியாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: 'ரயிலில் பணியில் இருக்கும் ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், அடையாள அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது' என, ரயில்வே உரிமைக்கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.குஜராத்தைச் சேர்ந்த ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் ராஜேஷ் பகுல். இவர், 2019 நவ., 13ல் பணி நிமித்தமாக சூரத் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் சென்றுவிட்டு, மீண்டும் சூரத்துக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.சூரத் - ஜாம் நகர் இன்டர்சிட்டி ரயிலில் பயணம் செய்த ராஜேஷ், பலேஜ் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அறுவை சிகிச்சை வாயிலாக மூட்டுக்கு கீழே கால் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்ததால், 8 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, ரயில்வே உரிமைக்கோரல் தீர்ப்பாயத்தில் ராஜேஷ் பகுல் முறையிட்டார். இவரது மனுவை விசாரித்த தீர்ப்பாயம், இழப்பீடு தர மறுத்துவிட்டது.தீர்ப்பாய உத்தரவின் விபரம்: ராஜேஷ் பகுல் பணி நிமித்தமாகத் தான் அந்த பயணத்தை மேற்கொண்டார் என்பதற்கு முறையான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லை. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பணி நிமித்தமாக ரயிலில் பயணிக்கும் போது, அதற்குண்டான அதிகாரப்பூர்வ பயண ஆவணம் அல்லது முறையான டிக்கெட் வைத்திருக்க வேண்டும்.அடையாள அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் பயணம் செய்ய இயலாது. இது போன்ற நேரங்களில் அவர்கள் பணி நிமித்தமாக சென்றனரா அல்லது சொந்த வேலையாக சென்றனரா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் முறையான ஆவணங்களுடன் ரயிலில் பயணிப்பதை ரயில்வே நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அப்பாவி
ஆக 06, 2024 16:17

பிற போக்கில் இஞ்சின் டிரவர், கார்டு கூட டிக்கெட் வாங்கிட்டுப்.போகணும். ஸ்டேஷன் மாஸ்டர் ப்ளாட்பாரம் டிக்கெட் எடுக்கணும். ஐ.ஆர்.சி.டி.சி பேராசைக்கு அளவே இல்லை.


அப்பாவி
ஆக 06, 2024 16:15

அப்படியே ஜனாதிபதி, பிரதமர் லேருந்து கவுன்சிலர், ஜஜ்ஜுங்க வரைக்கும் டோல்.கேட்டில்.காசு குடுத்து போகச் சொல்லுங்க. நாம எல்லோரும் சமம்.


V RAMASWAMY
ஆக 06, 2024 11:29

சாதாரண சிடிசன்களாக ரயில்வே பணியிலிருக்கும் ரயில்வே போலீசுக்கே இந்த நிலை வந்துவிட்டதால், இனி அபரிமித சம்பளம், சலுகைகள், பென்சன் இவைகள் பெற்று அதி உன்னத வாழ்வடையும் எம் பி, எம் எல் ஏக்களுக்கும் இலவச ரயில், விமான பயணங்கள் ரத்து செய்து மக்கள் வரிப்பணத்தைக் காப்பாற்ற வேண்டும்.


RAAJ68
ஆக 06, 2024 11:04

அநியாயமான தீர்ப்பு. ஒரு காலை எழுந்தவர் வாழ்வாதாரமில்லாமல் இருக்கிறார். ரயில்வே அதிகாரிகள் ஆடம்பர செலவு செய்கின்றனர். குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்ய பாஸ் வைத்துள்ளனர். எவ்வளவோ ரயில்வே துறையின் பொருட்கள் மழையிலும் வெயிலிலும் பாழாகிக் கொண்டுள்ளன. ஆனால் ரயில்வே போலீஸ் பணி நிமித்தம் காரணமாக சென்றாரா இல்லையா என்று தெரியாததால் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பு மனவலியை தருகிறது. மின்சார ரயில் பெட்டிகளில் அடிமட்ட தொழிலாளர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்கின்றன அவைகளை எல்லாம் தட்டிக் கேட்பதற்கு வெளியேறியர்களுக்கு துணிச்சல் இல்லை.


KR india
ஆக 06, 2024 10:17

"மனிதாபிமானமற்ற ரயில்வே உரிமைக்கோரல் தீர்ப்பாயம்" என்றல்லவா இந்த செய்தியின் தலைப்பு வைத்திருக்க வேண்டும் ரயில்வே காவலர், ரயிலில் தவறி விழுந்து, தனது முட்டிக்கு கீழ் கால் அகற்றப் பட்டுள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் பக்கம் அல்லவா இருக்க வேண்டும்? அதை விட ரயில்வே டிக்கெட் மதிப்பு பெரிதல்ல


அஜய் சென்னை இந்தியன்
ஆக 06, 2024 10:16

இதை முதலில் எல்லா அரசு துறை ஊழியர்களுக்கும் சொல்ல வேண்டும். கட்டணம் இல்லாமல் ஓசி பயணம் செல்ல கூடாது. அதே போல் அரசுதுறையில் உள்ளவருக்கு கட்டணத்தில் சலுகை அறிவிக்க கூடாது. அதே போல் MP,.MLA களுக்கும் எந்த சலுகையும் கொடுக்க கூடாது. எல்லோரும் சமம் ஆகா பாருக்கும் அளவில் அரசின் செயல் பாடு இருக்க வேண்டும்


KR india
ஆக 06, 2024 10:07

மேற்கண்ட செய்தியில், அந்த ரயில்வே காவலர் தவறி விழுந்து முட்டிக்கு கீழ் கால் அகற்றப் பட்டுள்ளதாக கூறப் பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. அதை விட வேதனை, அற்பக் காரணத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு இழப்பீட்டு தொகையை மறுத்து ஆணையம் உத்தரவிட்ட தீர்ப்பு. இது மனிதாபிமானமற்ற தீர்ப்பு. இது போன்ற விஷயங்களில் அவர் பணி நிமித்தமாக தான் சென்றாரா என்ற ஆராய்ச்சி எதற்கு ? அந்த இழப்பீட்டை வழங்கியிருந்தால், அவருக்கு ஒரு சிறு ஆறுதலாக இருந்திருக்கும். மருத்துவ செலவுகளுக்கு தேவையாக இருந்திருக்கும். தீர்ப்பு மறுபரிசீலனை தேவை.


Ramesh Sargam
ஆக 06, 2024 07:47

ரயில்வே போலீஸ் வேண்டுமென்றால் கருணாநிதி மாதிரி ஒளிந்துகொண்டு பயணிக்கலாம்.


SRIRAM
ஆக 06, 2024 07:28

ஆனா வடக்கன் பிரீயாபோகலாம் அவன யாரும் கேட்க முடியாது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை