உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபாச வீடியோ வழக்கு: பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன்

ஆபாச வீடியோ வழக்கு: பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ம.ஜ.த.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கும், அவரது தந்தை எச்டி ரேவண்ணாவுக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார். சில பெண்களுடன் பிரஜ்வல் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை கர்நாடக அரசு நியமித்துள்ளது.விசாரணை அதிகாரியாக சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பிரிஜேஷ்குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமன் பன்னேகர், சீமா லட்கர் மேற்பார்வையில் விசாரணை நடக்கிறது. இந்த குழுவில் எஸ்.பி., உட்பட 18 போலீசார் இடம் பெற்று உள்ளனர்.பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களிடம் சீமா லட்கர் விசாரணை நடத்தி தகவல் பெற்று கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி கர்நாடக அரசுக்கு தேசிய பெண்கள் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. பிரச்னை பெரிதானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மஜத.,வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.இந்நிலையில், பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்டி ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
மே 01, 2024 16:46

பாஜக கூட்டணியில் இருக்கும் வரை அல்லது பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கும் வரை இவர் பாதுகாப்பாக இருப்பார்! கூட்டணி தர்மம்!


Srinivasan Krishnamoorthi
மே 01, 2024 15:41

தேர்தலுக்கு முன்பே வேறு நாட்டிற்கு சென்று விட்டாரோ ?


Kasimani Baskaran
மே 01, 2024 10:38

காங்கிரசுடன் கூட்டணியிலிருந்த பொழுது புனிதராக இருந்தார் இப்பொழுது திடீர் என்று கெட்டவராகிவிட்டார் போல தெரிகிறது


ஆரூர் ரங்
மே 01, 2024 10:21

வாரிசுகள் ஆடாத ஆட்டமா? அவர்களது அதிர்ஷ்டம் அப்போது பென்டிரைவ், டிஜிட்டல் கேமரா வரவில்லை.


ஆரூர் ரங்
மே 01, 2024 10:19

சாதி, மொழி வெறியர் வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் கர்நாடக அரசியல்வாதிகள் ஒழியும்வரை இது போன்ற நிகழ்வுகள் தொடரும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை