உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேரம் தவறாத சர்வதேச விமான நிலையங்கள்: 2, 3வது இடங்களில் ஹைதராபாத், பெங்களூரு

நேரம் தவறாத சர்வதேச விமான நிலையங்கள்: 2, 3வது இடங்களில் ஹைதராபாத், பெங்களூரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச அளவில் 2023ம் ஆண்டில் சரியான நேரத்தில் விமானங்கள் இயக்கப்பட்ட விமான நிலையங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையம் 2வது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 3வது இடத்திலும் உள்ளது.சர்வதேச விமான நிலையங்களின் கடந்த ஆண்டு நேர செயல்திறன் குறித்து ‛சிரியம்' என்ற விமான போக்குவரத்துத்துறை ஆய்வு நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், பெரிய விமான விமான நிலையங்களில்அமெரிக்காவின் மினியாபொலிஸ் செயின்ட் பால் விமான நிலையம் 84.44 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.2வது இடத்தில் 84.42 சதவீத புள்ளிகளுடன் ஹைதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையமும்,84.08 சதவீத புள்ளிகளுடன் 3வது இடத்தில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமும் உள்ளது.நடுத்தர அளவிலான விமான நிலையங்களில் ஜப்பானின் ஒசாகா விமான நிலையம் 90.71 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.கோல்கட்டா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் 83.91 சதவீத புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.சரியான நேரத்தில் இயங்கும் விமான நிறுவனமாக கொலம்பியாவின் ஏவியன்கா விமான நிறுவனம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramanathan Muthiah
ஜன 04, 2024 00:52

அப்போ சென்னை விமான நிலையம் ⁉️⁉️


Ramesh Sargam
ஜன 04, 2024 00:40

வாழ்த்துக்கள் ஹைதெராபாத், பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளுக்கு.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி