உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்

தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் சமூகவலை தளங்களில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. உலகளவில் 2ம் இடத்திலும், தேசிய அளவில் முதலிடத்திலும் டிரெண்டிங்கில் உள்ளது.பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ள இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறது. மொத்தம் 9 நிலைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட பயங்கரவாத முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. இந் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சமூக வலைதளமான எக்ஸ் வலைதளத்தில் தேசிய அளவில் ஆபரேஷன் சிந்தூர் டிரெண்டிங்கில் 2ம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கிறது. இது தவிர, தேசிய அளவில் ஜெய் ஹிந்த், இந்திய ராணுவம், பாகிஸ்தான், இந்திய விமானப்படை ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங்கில் இருக்கின்றன. இந்த ஹேஷ்டேக்குகளில் இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை தற்போது மிக அவசியம், பாராட்டுகள் என்று பலரும் பதிவிட்டு, இந்திய ராணுவத்தை புகழ்ந்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

பல்லவி
மே 08, 2025 02:49

வாழ்த்துக்கள்


vamprinters
மே 07, 2025 14:11

Congratulation proud of our அருமை. Jai Hind.


Ramesh Sargam
மே 07, 2025 12:25

இது போதுமா? இல்ல இன்னும் கொஞ்சம் வேண்டுமா?


பெரிய ராசு
மே 07, 2025 11:19

அடிக்கற அடில அடிவயிறு கலங்கிவிடனும்...ஜெய் ஹிந்துஸ்தான்


K V Ramadoss
மே 07, 2025 11:10

Congrats to our Defence forces... WE WILL WIN....Hope we will get back the PoK too...


Sangi Saniyan
மே 07, 2025 11:06

அப்படினா முதலிடத்தில் என்ன இருக்கிறது இதை விட முக்கியமா??


Karthik
மே 07, 2025 10:41

ஜெய் ஜவான்.. ஜெய் ஹிந்த்..


பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 07, 2025 10:34

அல்லக்கைகள்,200 உ பி ஸ் கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.


Arjun
மே 07, 2025 10:14

ஜெய்ஹிந்த் ஜெய்பாரத்


Kasimani Baskaran
மே 07, 2025 10:11

ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை