உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை தத்தெடுக்க வாய்ப்பு

பணி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை தத்தெடுக்க வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சி.ஆர்.பி.எப்., படையில் பயிற்சி பெற்று பணி ஓய்வு பெற்ற மோப்ப நாய்களை, பொதுமக்கள் தத்தெடுத்து வளர்க்க முதல்முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மோப்ப நாய் படைப்பிரிவு உள்ளது. இதில், சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் நக்சல் எதிர்ப்பு, பயங்கரவாத தடுப்பு பணிகளில் செயலாற்றியதுடன், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து பல உயிர்களை காத்துள்ளன. பொதுவாக பாதுகாப்பு படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெறும் நாய்களை பொதுமக்களிடம் தத்து கொடுத்தால், அவை தேசவிரோத பணிகளுக்கு பயன்படுத்தப்பட கூடும் என்பதால், பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.தற்போது, சி.ஆர்.பி.எப்., படைப்பிரிவில் ஓய்வு பெற்ற நான்கு கால் வீரர்களை, 'ஆன்லைன்' வாயிலாக பொதுமக்களுக்கு தத்துக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பெல்ஜியன் ஷெப்பர்ட் மாலினோயிஸ், ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடார், உள்நாட்டு வகையான முதோல் வேட்டை நாய்கள் தத்துக் கொடுக்கப்பட உள்ளன. நாய்களை தத்தெடுக்க கட்டணம் இல்லை. சி.ஆர்.பி.எப்., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களை பார்த்து நாய்களை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். பல்வேறு கட்ட தீவிர ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கு பிறகே நாய்கள் தத்துக் கொடுக்கப்பட உள்ளன என, சி.ஆர்.பி.எப்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramachandran Chandrasekaran
ஜன 10, 2025 10:42

கிழிஞ்சுது போ தமிழ்நாட்டுல CRPF இல்லவே இல்லை, எல்லாம் வெளி மாநிலத்துல தான் இருக்கு. ரிட்டையர்ட் நாய்க்கெல்லாம் 10 வயசுக்கு மேல தான் இருக்கும் இதை வாங்கிட்டு வரும் போதே தங்குமாங்கறது தெரியாது, வாங்கிட்டு வந்ததுக்கு பிறகு அது கூட தான் நேரம் செலவழிக்கணும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 10:29

எங்கே எப்படி சுருட்டலாம் என்று மோப்பம் பிடிக்கும் திராவிட மாடல் நிபுணர்களைவிட இவை சிறந்தவையா ????


raj82
ஜன 10, 2025 08:57

போட்டோ நல்லா இருக்கு .ஒரிஜினல் போட்டோ போயி பாத்தீங்களா ?


Senthoora
ஜன 10, 2025 09:45

அதுகள் உங்களைவிட நல்லாக இருக்கும். இந்த மோப்பநாய்களுடன் வேலைசெய்பவர்கள் சொல்லும் ஒரு பழமொழி அதன் கருத்து அம்மான்னா சும்மாவா, நாய் என்றால் நக்கலா" .


Kasimani Baskaran
ஜன 10, 2025 06:00

இவைகளை பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல.


Senthoora
ஜன 10, 2025 09:41

உண்மை ஆனால் பிள்ளைகளை விட இதுகள் சொல் கேட்டு நடக்கும், மாதாமாதம் கிருமித்தொற்று மருந்து, வருடத்துக்கு ஒருமுறை நோய்த்தடுப்பு ஊசி, இவை பழைய உணவு உண்ணாது, பொதுவாக இந்த நாய்கள் எத உத்தியோத்தருடன் அதிக வேலை செய்ததோ அவர்தான் தத்து எடுப்பது வழக்கம், ஏன்னா பாசப்போராட்டம், அதேநேரத்தில் இந்த நாய்களுக்கு ஓய்வு கொடுக்கும்போது, அதுக்குரிய ஓய்வு ஊதியத்தையும் கொடுக்கணும், இது மேல்நாடுகளில் இருக்கும் சட்டம்.


சமீபத்திய செய்தி