உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டுக்காவலில் எதிர்கட்சி தலைவர்கள்: பா.ஜ., மீது அகிலேஷ் குற்றச்சாட்டு

வீட்டுக்காவலில் எதிர்கட்சி தலைவர்கள்: பா.ஜ., மீது அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ள நிலையில் எதிர்கட்சி தலைவர்களை வீட்டுக்காவலில் வைப்பதாக உ.பி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் , பா.ஜ. அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. இந்நிலையில் உ.பி மாநிலம் கணோஜ் தொகுதியில் கட்சியினர் சந்தித்து பேசிய பின் அகிலேஷ் கூறியது,எதிர்கட்சி தலைவர்கள் , தேர்தலில் பணியாற்றியவர்களை பா.ஜ., அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. அவர்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.இது சரியல்ல. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அவர்களை உடனே விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் நியாயமான முறையில் வாக்கு எண்ணப்பட வேண்டும். இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ramani
ஜூன் 04, 2024 07:02

நல்ல செய்தி. இவ்தேச துரோகிகளை வீட்டு சிறையில் வைத்தது மிகவும் நல்லது விஷயம்


Devan
ஜூன் 04, 2024 06:49

எதிர் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில இருந்தால் எப்படி காங்கிரஸ் வெற்றியை கொண்டாட ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. திருடன் இருக்க வேண்டியது சிறைச்சாலை. ஏதோ தேர்தல முடிவுகளை கண்டு களியுங்கள் என்று வீட்டு காவலில் வைத்துள்ளார்கள என்று நினைத்துக் கொள்.


Indhuindian
ஜூன் 04, 2024 06:10

எப்படியும் புட்டுக்கும்னு தெரிஞ்சி வூட்டுக்குள்ளயே கமுக்கமா இருந்துகினு இப்பிடி ஒரு பில்டப் குப்புற விஷுந்தாலும் மீசையிலே மண் ஓட்டல ஏன்னா இவரு மீசையே வெச்சுக்கல்லே


Indhuindian
ஜூன் 04, 2024 06:00

எப்படியும் புட்டுக்கும்னு தெரிஞ்சி வெளியிலே வந்து கேவலப்படவேணாம்னு இவர்களே வூட்டுக்குள்ளே கமுக்கமா இருந்துகிட்டு வீட்டுக்காவல்ன்னு பில்டப்


Kasimani Baskaran
ஜூன் 04, 2024 05:32

ஒருவேளை இவர்கள் கலகம் செய்ய காத்திருப்பது மோடிக்கு தெரிந்திருக்குமோ?


Azad
ஜூன் 04, 2024 04:59

தேர்தல் கமிஷனர் என்ற தேச அடியாக்கள் இருக்கும் பட்சத்துல நாட்டில் எப்படி இருக்கும் அமைதி இனி ஒரு புதிய சுதந்திரத்துக்கு போராட வேண்டியது தான் மக்கள்


Devan
ஜூன் 04, 2024 06:45

இப்படியே கூவிக்கிட்டு இரு


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 04, 2024 03:52

வீட்டுக்கு காவலில் இருந்தால் இவர் எப்படி ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிறார்?


kalyan
ஜூன் 04, 2024 03:27

தோல்விக்கு குறை கூற தேர்தல் ஆணையத்தையும் தேர்தல் அதிகாரிகளையும் குறை கூறி இந்தியாவில் தேர்தல் சரியாக நடத்தப்படவில்லை என்ற Narrative ஐ உருவாக்க எதிர்க்கட்சிகளுக்கு மேற்கத்திய நாடுகள் DEEP STATE, மற்றும் GEORGE SOROS பணம் கொடுத்துள்ளனர் .அதன் விளைவே இது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை