மேலும் செய்திகள்
மும்பையில் 1.28 லட்சம் பேரை கடித்த தெருநாய்கள்
34 minutes ago
பெங்களூரு: ''வேட்பாளர் பட்டியலை அனுப்பி வைப்பது மட்டுமே எங்கள் பொறுப்பு. யார் வேட்பாளர் என்பதை, மேலிடம் முடிவு செய்யும்,'' என, கர்நாடகா பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்து, எங்கள் கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எங்கள் கூட்டணியில் ம.ஜ.த.,வும் உள்ளது. நாங்கள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். ஒவ்வொரு தொகுதியிலும் 'சீட்' கேட்பவர்கள் நிறைய பேர் இருந்தனர்.இதனால் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை அனுப்பிவைத்து, நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகள் பெறப்பட்டன. அந்த அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு முதல் மூன்று பேர் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் பட்டியல் மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.வேட்பாளர் பட்டியலை அனுப்பி வைப்பது மட்டுமே எங்கள் பொறுப்பு. யார் வேட்பாளர் என்பதை, கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், புதியவர்களுக்கு பா.ஜ., 'சீட்' கொடுத்தது. லோக்சபா தேர்தலிலும் புதியவர்கள் 10 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
34 minutes ago