உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெற்றோரே உஷார்...! இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது; மத்திய அரசு முக்கிய அறிவுரை

பெற்றோரே உஷார்...! இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது; மத்திய அரசு முக்கிய அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில், இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக 15 நாட்களுக்குள் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சுகாதார அதிகாரிகள், சில நாட்களுக்கு முன்பு சிகாரில் இதேபோன்ற மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இறந்த 9 குழந்தைகளில், குறைந்தது 5 பேர் உயிரிழப்பிற்கு, கோல்ட்ரிப் இருமல் மருந்து எடுத்துக் கொண்டது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், கோல்ட்ரிப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில், இருமல் மருந்து உட்கொண்டதால் 11 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட இருமல் மருந்து கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை சார்பில், அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:* இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக் கூடாது.* பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை.* டாக்டர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.* எந்தவொரு வைரஸ் நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ems
அக் 04, 2025 10:05

Coldrif Chlorphenirmine, paracetamol, பனிலேபிரின் இருமல் மருந்து 2023 ஜூன் மாதம் முதல் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இந்தியாவில் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சுகாதார அமைச்சர் வெளியிட்டு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. இதை அறியாத மருத்துவ நிபுணர்கள், விற்பனையாளர்கள் தான் இந்த துயர சம்பவம் நடைபெற காரணம்


Anantharaman Srinivasan
அக் 04, 2025 00:08

இருமல் மருந்து யாருக்குமே நல்லதல்ல. சிறந்த ENT மருத்துவர்கள் இருமல் மருந்தை பரிந்துரைப்பதில்லை.


Field Marshal
அக் 03, 2025 20:15

காஷ்மீரில் பாட்டில் பாட்டிலாக இருமல் மருந்து குடிக்கும் பழக்கம் பெண்களிடம் அதிகம் விமானத்தில் அதிக நேரம் பயணிப்பவர்கள் குழந்தைகளுக்கு பெனாட்றில் இருமல் மருந்து கொடுப்பது வழக்கமா இருந்தது


Moorthy
அக் 03, 2025 19:40

பல ஏழை நாடுகளில் இந்த இருமல் சிரப் மருந்து சாப்பிட்ட குழைந்தைகள் உயிரிழந்துள்ளது. ஆகவே பெற்றோர்கள் கவனம் அவசியம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை