உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராபர்ட்சன் பேட்டை முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை

ராபர்ட்சன் பேட்டை முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை

தங்கவயல்: ராபர்ட்சன் பேட்டை முக்கிய சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படுகிறது என, ஜெயின் வார்டு கவுன்சிலர் ரமேஷ் ஜெயின் கூறினார்.நேற்று அவர் அளித்த பேட்டி:ராபர்ட்சன் பேட்டையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் இன்றி நடைபாதைகள், பஸ் நிலையங்களில் நிறுத்தி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த புல் மார்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனால், இரு சக்கர வாகனங்களை ராபர்ட்சன் பேட்டையில் முக்கிய சாலைகளான பிரிட்சர்ட் சாலை, பி.எம். சாலை, மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் நிறுத்த கூடாதென நகராட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் இன்று முதலே இரு சக்கர வாகனங்களை நடைபாதைகள், பஸ் நிலையம், பொதுமக்கள் நடமாடும் இடங்களில் நிறுத்தக் கூடாது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.புல் மார்க்கெட் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளோம். சிமென்ட் சாலை, கண்காணிப்பு கேமரா, ஆகியவை நிறுவப்படுகிறது. அத்துமீறி வாகனங்களை கண்ட இடத்தில் நிறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை