உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு மீண்டும் பரோல்

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு மீண்டும் பரோல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ஹரியானாவில், ஆசிரம பெண்கள் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 50 நாள் பரோல் வழங்கியதையடுத்து இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.ஹரியானாவில், 'தேரா சச்சா சவுதா' அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், இரு கொலை வழக்குகளில் ஆயுள் மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் 2017-ம் ஆண்டு 20 ஆண்டு சிறை தண்டனை பெற்று ரோஹ்தக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்தா 2022 ம் ஆண்டு துவங்கி கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பல முறை பரோல் பெற்று வெளியே வந்தார். இந்நிலையில் மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்த ராம் ரஹீமிற்கு 50 நாள் பரோலில் செல்ல அனுமதி கிடைத்ததையடுத்து ரோக்டாக்கில் உள்ள சுனேிரியா சிறையிலிருந்து வெளியே வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி