மார்ச் 23, 24ல் காளியம்மன் கோவிலில் பார்வதி - பரமேஸ்வரன் திருக்கல்யாணம்
ஹலசூரு: ஹலசூரு சுயம்பு காளி அம்மன் கோவிலில் வரும் 23, 24ம் தேதி பார்வதி - பரமேஸ்வரன் கல்யாண உற்சவம் நடக்கிறது.பார்வதி - பரமேஸ்வரன் கல்யாண உற்சவத்தை ஒட்டி, வரும் 23ம் தேதி மாலையில் பந்தக்கால் நடப்படுகிறது. மணமகன் அழைப்பு, இரவில் விருந்து உபசரிப்பு நடக்கிறது. 24ம் தேதி காலையில் ரிஷப லக்னத்தில் சுபமுகூர்த்தம், மாங்கல்ய தாரணம் நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.இதில் பங்கேற்பதால், திருமணம் ஆகாதாவர்களுக்கு திருமணம் நடக்கும். பணக்கஷ்டம் தீரும்.விழா ஏற்பாடுகளை பார்த்திபன், சந்தானம் குடும்பத்தினர் செய்துள்ளனர்.