உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொம்மைக்கு தகுதி இல்லை பாட்டீல் கோபம்

பொம்மைக்கு தகுதி இல்லை பாட்டீல் கோபம்

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலுக்கு பின் காங்கிரஸ் அரசு கவிழும் என கூற பொம்மைக்கு என்ன தகுதி உள்ளது,'' என கனரகம், நடுத்தர தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதில், பா.ஜ., ஆட்சியில் முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மையின் பங்களிப்பு உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது குறித்து அவர் பேச என்ன தகுதி உள்ளது.பசவராஜ் பொம்மை முதல்வரானதும், அப்பதவிக்கு அறிவாளி ஒருவர் தேர்வு செய்யப்பட்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அதை அவரால் தக்க வைக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை