உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்

திரும்ப திரும்ப ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர்; பியூஷ் கோயல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அடுத்தடுத்து ஓட்டுப் போட்டு மக்கள் சலித்துப் போய் விட்டனர். இதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் தான் தீர்வு' என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.டில்லியில் தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களின் மாநாட்டில் அவர் பேசியதாவது; நிர்வாக செலவுகளைக் குறைக்கவும், பலகட்ட தேர்தல்களால் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும், லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களையும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டியது அவசியமாகிறது. அடுத்தடுத்து ஓட்டு போடுவதால் வாக்காளர்கள் சோர்வடைகின்றனர். தேர்தலின் போது நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது நிர்வாகப் பணிகள் பெரும்பாலும் பாதிக்கப்படும்.மேலும் மாவட்டம் முதல் மாநில அளவில் உள்ள அமைப்புகள் அகில இந்திய நடவடிக்கைக் குழுவை உருவாக்க வேண்டும். வர்த்தகத் துறையினர் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரித்தால், நாம் இந்தியாவின் ஒவ்வொரு இதயத்தையும் தொட முடியும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kamal 00
ஆக 24, 2025 05:28

இதுவும் சரி தான்..... ஆனா அடிக்கடி அவனுக வீசுற எலும்பு வராதே... ஏன்னா நாங்க வாங்கி பழகி தொலைஞ்சுட்டோம்.... இப்படி பண்ணலாம். ஒரே தேர்தல் வச்சு முடிச்சிட்டு,,,, ஒரு வருசத்துக்கு ஒருக்கா mla, mp களுக்கு தொகுதி பத்துன கேள்விதாள் தேர்வு வைக்கனும்.... கண்டிப்பா எங்களை நோக்கி வரனும்....


Priyan Vadanad
ஆக 23, 2025 22:48

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே தலைவர். சோலி முடிஞ்சுது. அப்புறம் அப்புறம் ஓட்டு போட்டவர்களுக்கு சலிப்பு, மூட்டுவலி, கால்வலி. பிறகு என்ன, நோ தேர்தல். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே தலைவர், எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.


vivek
ஆக 24, 2025 08:45

நீ ஒரே சட்டியில் வடை சுட்டால் போதும் பிரியன்


முருகன்
ஆக 23, 2025 21:35

ஓட்டு கேட்டு கேட்டு கால் வலிக்கிறது இவர்களுக்கு அதனால் இப்படி பேசுகின்றனர் ஒரே ஒரு முறை விட்டால் இந்தியா முழுவதும்


Anantharaman Srinivasan
ஆக 23, 2025 22:40

ஒவ்வொருமுறையும் ரூ500/1000 ஓட்டுக்கு தர வேண்டியிருக்குதே என்ற அங்கலாய்ப்பு.


kamal 00
ஆக 24, 2025 05:29

திங்கும் போது இனிக்குது...திராவிட மங்கி களுக்கு தான் தலைவலி


vivek
ஆக 24, 2025 08:44

அது எந்த கட்சின்னு சொல்ல தைரியம் இல்லையே அனந்து சார்


vivek
ஆக 24, 2025 08:46

உனக்கு காலம் முழுவதும் கோபாலபுரம் கொத்தடிமை தகுதி தான் இருக்கு


புதிய வீடியோ