2014 தேர்தலில் காங்கிரஸ் தோற்க வெளிநாடுகள் சதி: மஹா., தலைவர் குற்றச்சாட்டுக்கு பாஜ கண்டனம்
புதுடில்லி: லோக்சபா தேர்தல் வெற்றிக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் உதவியதாக மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நேற்று( நவ.,26) அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் குமார் கேட்கர் பேசுகையில், அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ஆகியவை 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைய சதி வேலையில் ஈடுபட்டன என்றார்.இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜவின் சம்பித் பாத்ரா கூறியதாவது: பாஜவின் வெற்றிக்கு சிஐஏவோ, மொசாட்டோ காரணம் அல்ல. மக்கள் தான் பாஜவை வெற்றி பெற வைத்தனர். காஸ் சிலிண்டர், வீடு ஆகிய திட்டங்களின் பலன்களை அனுபவித்தர்கள், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் பாஜவை வெற்றி பெற வைத்தனர் என்றார்.மேலும் அவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் திட்டப்படி, ராமர் கோவிலை எதிர்த்து பாபர் மசூதியை மீண்டும் கட்ட வேண்டும் என்கிறீர்கள்அவர்களின் திட்டத்தை பின்பற்றினால், பிறகு எப்படி கட்சி வளர்ச்சி பெறும்.பீஹாரில் தற்போது வெறும் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரும் நாட்களில் நடக்கப்போவதை பொறுத்து இருந்து பாருங்கள். தற்போது அவர்களால் ஆட்டோரிக்ஷாவில் பயணம் செய்ய முடிகிறது. ஆனால், ஸ்கூட்டியில் கூட பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.