உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சிக்கிறார்: ராகுல் மீது துணை ஜனாதிபதி மறைமுக சாடல்

நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சிக்கிறார்: ராகுல் மீது துணை ஜனாதிபதி மறைமுக சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' அரசியலமைப்பு பதவியில் இருப்பவர் நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முயற்சி செய்கிறார்'', என எதிர்க்கட்சி தலைவர் ராகுலை மறைமுகமாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்து உள்ளார்.அதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டிய செபி அமைப்பின் தலைவர் மற்றும் அவரது கணவரும், அக்குழுமத்தின் பங்குகளை வாங்கியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறியது. இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல், '' இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்'' எனக்கூறி இருந்தார்.இந்நிலையில், தேசிய சட்டப்பல்கலை மாணவர்கள் மத்தியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் அமைப்பு பதவியில் உள்ள ஒருவர் கூறினார். இது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.நாட்டின் மீது சுயநலன்களையும்,பாகுபாட்டையும் நிறுவும் சக்திகளை இளைஞர்கள் அடையாளம் கண்டு, அதனை நடுநிலையாக்க வேண்டும். நாம் அதனை அனுமதிக்க முடியாது. சட்டசபையாக இருந்தாலும், நிர்வாகத்துறையாக இருந்தாலும், நீதித்துறையாக இருந்தாலும் ஒரு நிறுவனத்தின் அதிகார வரம்பை இந்திய அரசியலமைப்பு வரையறுத்து உள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உச்சநீதிமன்றங்களுக்கு அதிகார வரம்பு வரையறுக்கப்பட்டு உள்ளது. அங்கு, நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு தொடரும் வாய்ப்பு உண்டா? அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதை தாண்டி ஒரு தீர்வு வழங்கப்பட்டு உள்ளதா? இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

PARTHASARATHI J S
ஆக 17, 2024 08:25

அது இருக்கா, இது இருக்கா என்பதே தாண்டி எது இருக்கோ அதன்படி செய்க.


J.Isaac
ஆக 16, 2024 21:59

பக்கா வெறி


ஆரூர் ரங்
ஆக 16, 2024 20:54

INDI கூட்டாளி ஆளும் ஏழு மாநிலங்களில் அடானி முதலீடு செய்து தொழில் நடத்துகிறார். கேரளாவில் ஒரு துறைமுகத்தையே காங் கம்யூனிஸ்டு அரசுகள் இரண்டும் அடானிக்கு கொடுத்துள்ளன. அடானி ஊழல்வாதியென்றால் தங்களது மாநிலங்களிலிருந்து வெளியேற அடானி க்கு உத்தரவிடலாமே? புள்ளி ராஜா கூட்டணி ஒரு நாடகக் கம்பெனி.


sankaranarayanan
ஆக 16, 2024 20:34

அதானி மீதான வழக்குகளை விசாரிக்க அவசரப்படும் இந்த உச்ச நீதி மாற்றம் நேஷனல் ஹீரால்டு வழக்கை விசாரிக்க சிறிதுகூட அவசரம் காட்டவில்லையே ஏன் இந்த பாகுபாடு? பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டு வைத்திருப்பவரை எப்படி இந்திய பாராளுமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க எப்படி அனுமதித்தது


venugopal s
ஆக 16, 2024 20:03

ஏன் மறைமுகமாக சாட வேண்டும்? இவர் சொல்வது உண்மை என்ற நம்பிக்கை இருந்தால் நேரடியாகவே சாட வேண்டியது தானே! பொய் என்பதால் சொல்ல பயமாக உள்ளதா?


gmm
ஆக 16, 2024 19:38

உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை பதிவு செய்து, எப்படி விசாரிக்க முடியும்? நீதிபதி வாதியாக மாற வேண்டும்.? கூண்டில் ஏற முடியுமா? பிரதி வாதி யார்? அரசியல் சாசனத்தில் ஒரு போதும் இப்படி விதி இருக்க முடியாது. பொது நல வழக்கை உருவாக்குவது அரசியல் சார்பு வழக்கறிஞர்கள். குறியிட்ட கட்சிக்கு எதிராக வழக்கு தொடுத்து, தினமும் உலகம் முழுவதும் செய்தி பரப்பி மிரட்டுவர். உச்ச நீதிமன்றம் பல காலம் தவறாக அதிகாரம் பயன்படுத்தி வருகிறது.? ஒரு குறிப்பிட்ட தனியார் கம்பெனி பற்றி வெளிநாடு நிறுவனம் புகார். மற்ற நிறுவனத்தில் எந்த குறையும் இல்லை என்று உறுதி செய்ய வேண்டும். அல்லது குறையுள்ள நிறுவனங்கள் அனைத்தும் பதிப்பில் இணைக்க வேண்டும். ராகுல் மீது ஊழல் வழக்கு. நாட்டின் எதிர்க்கட்சி தலைவர். என்ன தேர்தல் / நீதி முறை? மத்திய அரசு சற்றும் தாமதம் செய்யாமல் நீதிமன்ற பணி, தேர்வு விதிகள் வகுத்து, அதிகாரம் தவறாக பயன்படுத்தி வருவதை தடுக்க வேண்டும்.


C.SRIRAM
ஆக 16, 2024 19:28

சொல்லப்பட்ட கருத்தில் முழு உண்மை இருக்கும் போது யார் சொன்னால் என்ன ?.


Dharmavaan
ஆக 16, 2024 19:07

வெளிப்படையான பேச்சு துணை ஜனாதிபதி சொல்வது . எந்த நாட்டிலும் இல்லாத கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும்


வைகுண்டேஸ்வரன்
ஆக 16, 2024 19:02

உச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்ற உடனே ஏன் பதறுகிறீர்கள்? அய்யா, 10வருடங்களாக பிஜேபி யிடம் தான் ஆட்சி. இப்போ அடுத்த 5 வருடங்களும் கூட பிஜேபி யிடம் தான் ஆட்சி. எ ஓர் எதிர்க்கட்சி தலைவரால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுத்த எப்படி முடியும்?? அறிவோட தான் பேசறீங்களா?? பதற்றத்தில் உளறுகிறீர்களே உச்ச நீதிமன்றத்தில் கூட உங்களுக்கு தான் ஆட்கள் இருக்காங்களே, அந்த பென்ச் சிடம் விசாரணை யை ஒப்படைச்சா போச்சு.


வைகுண்டேஸ்வரன்
ஆக 16, 2024 18:55

உச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் என்ற உடனே ஏன் பதறுகிறீர்கள்? அய்யா, 10வருடங்களாக பிஜேபி யிடம் தான் ஆட்சி. இப்போ அடுத்த 5 வருடங்களும் கூட பிஜேபி யிடம் தான் ஆட்சி. எ ஓர் எதிர்க்கட்சி தலைவரால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுத்த எப்படி முடியும்?? அறிவோட தான் பேசறீங்களா?? பதற்றத்தில் உளறுகிறீர்களே உச்ச நீதிமன்றத்தில் கூட உங்களுக்கு தான் ஆட்கள் இருக்காங்களே, அந்த பென்ச் சிடம் விசாரணை யை ஒப்படைச்சா போச்சு.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ