பெட்ரோல் குண்டு வீச்சு; வாலிபர்கள் இருவர் கைது
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி குத்தன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அகில், 21, இவரது நண்பர் ராகுல், 21. இந்நிலையில், 17 வயது பெண்ணை அகில் காதலித்துள்ளார். இதை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஆனால், காதலிக்க பெண் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த அகில், நண்பன் ராகுலுடன் சேர்ந்து, கடந்த, 14ம் தேதி நள்ளிரவு, 1:30 மணி அளவில் பெண்ணின் வீட்டிற்கு பைக்கில் சென்று, பெட்ரோல் குண்டு வீசி விட்டு, தப்பி சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குழல்மன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அகில், ராகுல் இருவரையும் கைது செய்தனர்.