உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மால்கள், பஸ் நிலையங்களில் பிங்க் ரூம்

மால்கள், பஸ் நிலையங்களில் பிங்க் ரூம்

மால், பஸ் நிலையத்தில் 'பிங்க் ரூம்'5 லட்சம் எல்.இ.டி., விளக்குகள்l சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 350 கோடி ரூபாயில் 250 மீட்டர் உயரம் கொண்ட கோபுரம் அமைக்கப்படும். இந்தாண்டில், 50 கோடி ரூபாய் வழங்கப்படும்l பெங்களூரு நகரை உருவாக்கிய கெம்பேகவுடாவின் மாகடியில் உள்ள வீடு, சமாதி, தொல்பொருள் எச்சங்கள், அடையாளங்களை பாதுகாத்து, பராமரிக்க, கெம்பேகவுடா வளர்ச்சி வாரியத்துக்கு, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடுl நகரில், 5 லட்சம் மின் விளக்குகள், எல்.இ.டி., விளக்குகளாக மாற்றப்படும்l நகரை அழகுமயமாக்கும் வகையில், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், சாலை சதுக்கங்கள், பூங்காக்கள் ஆகிய பகுதிகளில், வண்ண வண்ண ஓவியங்கள் வரைந்து, மின் விளக்குகள் பொருத்துவதற்கு, 100 கோடி ரூபாய் வழங்கப்படும்l சாலை சதுக்கங்கள், பொது இடங்களை அழகுபடுத்த 20 கோடி ரூபாயும்; பூங்காக்களில் கண்காட்சி ஏற்படுத்த 5 கோடி ரூபாயும் வழங்கப்படும்l மால்கள், பஸ் நிலையங்கள், பொது கழிப்பிடங்களில், 'பிங்க் ரூம்' எனும் 'இளஞ்சிவப்பு அறை' அமைக்கப்படும். இங்கு, பெண்களுக்கு மாத விடாய் காலத்தில், சானிட்டரி நாப்கின்கள், ஓய்வறைகள் இருக்கும். ஆம்புலன்ஸ்கள் வருவதை கண்காணித்து, அவற்றிற்கு வழி விடும் வகையில், நவீன போக்குவரத்து சிக்னல் முறை அறிமுகம் செய்யப்படும்l நகரின் கலை, கலாசாரம், பாரம்பரியம், வரலாறு, இலக்கியத்தை தெரியப்படுத்தும் வகையில், தனி பிரிவு துவங்கப்படும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடத்தில் பெங்களூரு திருவிழா கொண்டாடப்படும். இதன் மூலம், பெங்களூரு நகர், சர்வதேச அளவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ