உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ப்ளீஸ் வீட்டை காலி செய்யுங்க: மணி சங்கர் அய்யருக்கு நோட்டீஸ்

ப்ளீஸ் வீட்டை காலி செய்யுங்க: மணி சங்கர் அய்யருக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, காங்., மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரின் மகள் சுரன்யா அய்யர் சர்ச்சை கருத்து தெரிவித்ததை அடுத்து, வீட்டை காலி செய்யும்படி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. புதுடில்லியின் ஜங்புரா என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், காங்., மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரன்யா அய்யர் வசித்து வருகின்றனர்.ஜன., 20ம் தேதி, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், சுரன்யா அய்யர் வெளியிட்ட பதிவில், 'முஸ்லிம் தரப்புக்கு ஆதரவாக, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போகிறேன்' என பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ajneu382&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், மத உணர்வை புண்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி, வீட்டை காலி செய்யும்படி, மணி சங்கர் அய்யர், அவரது மகள் சுரன்யா அய்யர் ஆகியோருக்கு, குடியிருப்போர் நலச்சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதன் விபரம்:உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இத்தகைய கருத்து தெரிவித்துள்ளதை ஏற்க முடியாது. மற்ற குடியிருப்பாளர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டாம். அமைதியை சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். இந்த தவறுக்கு, மகள் சுரன்யா அய்யரை, மணி சங்கர் அய்யர் கண்டிக்க வேண்டும். இல்லையெனில், வீட்டை காலி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

பாரதி
பிப் 01, 2024 14:49

ஐயர்னு பேர்ல வச்சுக்கிட்டு, நாடு பூரா கெட்ட பேரு வாங்கிகிட்டு, எல்லோருக்கும் இடைஞ்சல் பண்ற இந்த குடும்பம் என்னைக்கு தான் அழியுமோ... கடவுளே...


Barakat Ali
பிப் 01, 2024 14:37

நல்ல குடும்பம் ............


M Ramachandran
பிப் 01, 2024 13:39

கல்லுளி மங்கன்கள் கல்லய்யே முழுங்கி ஏப்பம் விடுபர்கள்


M Ramachandran
பிப் 01, 2024 13:37

காங்கரஸ் கட்சி ஆசாமி என்றால் யேடாகூடமான ஆசாமிகள். கழுதைய்ய பிடித்து தள்ளினாலும் அரசு வீட்டை விட்டு காலி பண்ணி போகா மறுக்கிறார்கள்


Subramanian N
பிப் 01, 2024 12:19

மத்திய அரசாங்கம் ஹிந்து என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் இவரை நாடு கடத்த வேண்டும்.


saravan
பிப் 01, 2024 11:05

இறுதி தேதி கொடுங்கள் அதன் பின்பு மின்சாரத்தை தடை செய்யுங்கள்...


சுந்தரம் விஸ்வநாதன்
பிப் 01, 2024 10:21

உடனடியாக அறிவாலயத்துக்கு வந்து சரணடைந்தால் ஆவன செய்யபபடும்.


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2024 08:38

இதெல்லாம் தேறாத கும்பல். அய்யர் என்ற பெயரில் நாடகம் போடும் கும்பல்


J.V. Iyer
பிப் 01, 2024 06:26

இருவரும் ஏற்கனவே பாக்கிஸ்தான் குடியுரிமை பெற்றுள்ளனர். அவர்களை பாகிஸ்தானுக்கே விரட்டவேண்டும்.


rama adhavan
பிப் 01, 2024 06:13

வரும் தேர்தலில் காங்கிரஸ்ஸில் மீண்டும் மயிலாடுதுறையில் இடம் கேட்டு துண்டு விரிப்பார் போல தெரிகிறது. எனவே குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறார்.


நரேந்திர பாரதி
பிப் 03, 2024 08:18

அதெல்லாம் ராஜிவ் கந்தி காலத்தோட மலை ஏறிப் போச்சு இந்த ஆளு எம்.பி. ஆனவுடன் மயிலாடுதுறையை குட்டி சிங்கப்பூராக மாத்துவேன்னு சொன்னாரு... இவரு சிங்கப்பூர் சீமான் கணக்கா பணம் சம்பாதித்ததுதான் மிச்சம் தொகுதி மக்களுக்கு பட்டை நாமம்தான்..


மேலும் செய்திகள்