UPDATED : நவ 25, 2025 09:08 AM | ADDED : நவ 25, 2025 09:07 AM
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று (நவ.,25) பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்.அயோத்தி நகர். ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (நவ.,25) தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலம் பூண்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரதமர் மோடி 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை கொடியேற்றுகிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரதமர் ரோடு ஷோ நடைபெற உள்ளது. கொடியேற்ற விழா குறித்து, ராமர் கோவியில் பணியாற்றும் பெண்கள் கூறியதாவது: ராமர் கோவிலில் 25 பெண்கள் வேலை செய்கிறோம். இங்கு வேலை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் கடின உழைப்பு வெற்றி பெற்றது. கொடியேற்ற விழா நடைபெற உள்ளது. இது போன்ற விஷயங்கள் எங்கள் காலத்தில் நடப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அவற்றைக் காண எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், என்றனர்.