உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு

புதுடில்லி: டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு படம் எடுத்துக் கொண்டனர்.மாநிலங்களுக்குரிய நிதிப் பங்கீட்டை நிர்ணயம் செய்யும் நிடி ஆயோக் அமைப்பின் ஆலோசனை கூட்டம் டில்லியில் இன்று (மே 24) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.இந்த நிடி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில், 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், திரிபுரா முதல்வர் மணிக் சாஹா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், குழு படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் தனது கோரிக்கையை முன் வைத்தார். கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இதற்கிடையே, இன்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அவருக்கு மாலை 4.10 மணியளவில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. டில்லி நிகழ்ச்சிகள் முடிந்து, இன்று இரவே தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vivek
மே 24, 2025 15:46

மாமன்னா.... மாங்காய் மன்னா.....திருட்டு மண்ணா.....


தஞ்சை மன்னர்
மே 24, 2025 11:02

அடுத்த முதலாளி யாரு ஓடி போறதுக்கு குஜராத்தில் கொண்டு போய் 82, 500 கோடியா கொட்டி இருக்கு இந்த நரேந்திராதமோதிர தாஸ் என்று தெரியவில்லை


ஆரூர் ரங்
மே 24, 2025 12:28

ஈடி ரெய்டு வருகிறார்கள் என்று அறிந்து நாட்டை விட்டு ஓடிய பாலிடாயிலின் பினாமி ரத்தீஷ் தமிழரா? இல்லை ஓங்கோல்காரரா?


SUBRAMANIAN P
மே 24, 2025 13:25

உன் முதுகுல இருக்குற வண்டி அழுக்கைப்பாரு . உலகத்துல இருக்குற எல்லா கெட்டவார்த்தையையும் உனக்குத்தான்.


Anand
மே 24, 2025 13:53

போலி பெயரில் அந்நிய எச்சம் செய்திக்கு சம்பந்தமே இல்லாமல் ஊளையிடுவது ஏனோ?


தஞ்சை மன்னர்
மே 24, 2025 10:52

திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணம் 82 ,500 கோடியை முழுசா தூக்கி கொண்டு போய் குஜராத்தில் நேற்று கொட்டியாச்சி போல சத்தம் இல்லாமல்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 24, 2025 13:52

அண்ணே தஞ்சை மன்னரே ....தமிழ்நாட்டுக்கு மோடிஜி மக்கள் வரி பணத்துல 12 லட்சம் கோடி நல திட்டங்களுக்கு கொடுத்திருக்கிறார் அதை பத்தியும் பேசுங்கண்ணா....!!!


Shekar
மே 24, 2025 14:27

வருசா வருசம் முப்பதாயிரம் கோடி சாப்பிடுறவங்களோட அடிமைகள் இங்கே ரீல் விடகூடாது


Shekar
மே 24, 2025 14:42

பார்க்குறது கொத்தடிமை வேலை, அப்பாவுக்கு போஸ்டர் ஒட்டி, இப்போ மகன், பேரன் ஆகியோருக்கும் போஸ்டர் ஒட்டி, இனிமேல் கொள்ளு பேரனுக்கும் போஸ்டர் ஓட்ட தயாராகும் நீ மன்னரா


Sathya
மே 24, 2025 15:13

good joke jalra


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை