உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னர் மாளிகையை விட்டு வெளியேற போலீசாருக்கு உத்தரவு

கவர்னர் மாளிகையை விட்டு வெளியேற போலீசாருக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் கவர்னர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை உடனடியாக வெளியேறும்படி, அம்மாநில கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் , மாநில அரசுக்கும், கவர்னர் ஆனந்த போசுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மக்களுடன், கவர்னர் ஆனந்த போசை சந்திக்க, பா.ஜ., மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, சமீபத்தில் கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார். இந்த சந்திப்புக்கு கவர்னர் அனுமதி அளித்திருந்த போதும், 144 தடை உத்தரவை காரணம் காட்டி, சுவேந்து அதிகாரி மற்றும் அவருடன் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எதன் அடிப்படையில் சுவேந்து அதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மேற்கு வங்க அரசுக்கு கவர்னர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், கவர்னர் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை உடனடியாக வெளியேறும்படி, கவர்னர் ஆனந்த போஸ் உத்தரவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கவர்னர் மாளிகையில் போலீசாரின் சோதனைச்சாவடி இருந்த இடத்தை, பொது மக்களை சந்திக்கும் இடமாக மாற்ற கவர்னர் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

chinnakaruppan
ஜூன் 20, 2024 16:38

சபாஷ் சரியான முடிவு.


Alagusundram KULASEKARAN
ஜூன் 19, 2024 09:39

சூப்பர் சூப்பர் சூப்பர் அதிரடி தேவை மம்தாவுக்கு. மம்தா அதிகம் திமிர் அதிகம் உடனே ஆளுநர்க்கு மட்டும் அல்லாமல் கொல்கத்தா உயர் நீதிமன்றம் வரை துணை ராணுவ வீரர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் சட்டம் மன்றத்தை முடக்க வேண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அறிக்கை என்ஐ முலம் பெற்று மத்திய உளவுத்துறை அனுப்பி மம்தாவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்


NAGARAJAN
ஜூன் 18, 2024 17:50

இந்த பாஜக கவர்னர்களின் அராஜக போக்கு கண்டிக்கப்பட வேண்டும்


Sangi
ஜூன் 18, 2024 07:17

தமிழக மூடர்கள் போல அங்கே இருக்கும் மூடர்கள் அந்த மாநிலம் வளர விடமாட்டார்கள்


sankaranarayanan
ஜூன் 18, 2024 05:53

மமதையின் கொடுங்கோலாட்சிக்கு மேற்கு வங்கத்தில் ஒரு எல்லையே கிடையாதா? ஆளுணரப்பந்தாடுவதுதான் முதலமைச்சரின் குறிக்கோளா? யார் ஆளுநராக வந்தாலும் இதே கதிதானென்றால் அப்போது எங்கய்யா இருக்கிறது நேர்மை


sankaranarayanan
ஜூன் 18, 2024 02:10

போடு தடால் உத்திரவு பாம்பின் காலை பாம்பால்தான் அறியமுடியும் - ஏட்டிக்கு போட்டி விடாதீர்கள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று செய்யுங்கள் மமதைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் காட்டவேண்டும் அங்கு அரசா அல்லது கொடுங்கோலா? மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் கிடையாது அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது போகிற போக்கை பார்த்தால் மேற்கு வங்கமாநிலமும் தேசமும் சீக்கிறமே ஒன்றிணைந்து விடும் போலிருக்கிறது. நவகாளி சம்பவம் திருப்பவும் நடப்பதற்கு மமதையை காரணமாகிவிடுவார் போலிருக்கிறது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை