உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.வி.ராமன் நகரில் பொங்கல் கொண்டாட்டம்

சி.வி.ராமன் நகரில் பொங்கல் கொண்டாட்டம்

சி.வி., ராமன் நகர் : சி.வி., ராமன் நகர் கக்கதாசபுரா முக்கிய சாலையில், பூர்வா சீசனஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு அதிகமான தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஒன்று கூடி, பூர்வா தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி, ஆண்டுதோறும் பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில், இம்முறை இன்று பொங்கல் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இன்று அதிகாலை 5:00 மணிக்கு, பெண்கள் ஒன்று கூடி சமத்துவ பொங்கலிடுகின்றனர். 7:00 மணிக்கு சூரிய பகவானுக்கு பூஜை செய்து, பொங்கலுடன், சிற்றுண்டி பரிமாறப்பட உள்ளது.அதன் பின், 10:30 மணி முதல், 12:00 மணி வரை தமிழ் பாடல்கள் பாடுவது, நடனமாடுவது போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ