உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணி ஓய்வுக்கு பின் சமூக சேவை ஏ.டி.ஜி.பி. ஹரிசேகரன் உறுதி

பணி ஓய்வுக்கு பின் சமூக சேவை ஏ.டி.ஜி.பி. ஹரிசேகரன் உறுதி

தங்கவயல்: ''அரசுப் பணி ஓய்வுக்கு பிறகு, சமூக சேவையில் ஈடுபடுவேன்,'' என்று கர்நாடக மாநில சிவில் டிபென்ஸ் கூடுதல் டி.ஜி.பி., ஹரிசேகரன் தெரிவித்தார்.தங்கவயல் உரிகம் பேட்டை - பெத்தப்பள்ளி சாலையில் உள்ள யங் ரீப்பர்ஸ் ஆப் கிரைஸ்ட் மினிஸ்ட்ரீஸ் என்ற கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காட்வின் மதுசூதன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கர்நாடக மாநில கூடுதல் டி.ஜி.பி. ஹரிசேகரன் பேசியதாவது.ஐ.பி.எஸ்., அதிகாரியான நான், கர்நாடகாவில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இதுவரை பொது நிகழ்ச்சிகளில் கன்னடத்தில் தான் பேசி வந்துள்ளேன். தமிழகத்தின் திருச்சி ல் பெரம்பலுாரை சேர்ந்தவன். இங்கு தமிழிலேயே பேசுகிறேன்.நான் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கிறிஸ்துவ பள்ளி, கல்லுாரிகளில் தான் படித்தேன். ஒழுக்கம் முக்கியம். சிறந்த மனிதனை உருவாக்குகிறது. அதனை புரிந்து கொண்டு அதன் பாதையில் தொடர வேண்டும். மனிதர்களுக்கு சமூக அக்கறையும் மிக அவசியம்.அமெரிக்காவில் நிறவெறி பாகுபாடு இருந்தது. அதனை மக்கள் எழுச்சி மூலம் மார்டின் லுாதர் கிங் மாற்றி அமைத்தார். எனக்கு பிடித்த தலைவர்.இது இன்டர் நெட் காலம். ஆங்கில அறிவும் வேண்டும். அப்போது தான் தொழிலில் பல சவால்களை எதிர்க்கொள்ள முடியும். கிராமத்து மக்களுக்கும், நகர மக்களுக்கும் இந்த பாகுபாடு பாதிப்பு உள்ளது.பெற்றோர்கள் தம் பிள்ளைகளை என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.எனது தந்தை முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ., அவர், என்னை 4 ம் வகுப்பு படிக்கும் போதே யு.பி.எஸ்.சி., தேர்வின் முக்கியத்துவத்தை உணர்த்தினார். என் மனதில் ஆழமாக பதிந்தது. ஆசிரியர்கள் திறமைசாலிகளாக இருந்தால் தான் மாணவர்களை அறிவாளிகள் ஆக உயர்த்த முடியும்.மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால் ஆசிரியர்கள் தான் பொறுப்பு. படிப்பை பாதியில் நிறுத்தி விடாமல் படிக்க வைக்க ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் நானும் சமூக சேவையில் ஈடுபடுவேன். பெற்றோர், ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.சி.எஸ்.ஐ., வட்டார தலைவர் ராபின் மார்ஷல் சிறப்பு ஜெபம் செய்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எலிஷா உட்பட பல போதகர்கள், குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி