உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் பலி; 12 பேர் காயம்

வங்கதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் பலி; 12 பேர் காயம்

டாக்கா: வங்கதேசத்தில் இன்று(நவ.,21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். கோல்கட்டா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.வங்கதேசத்தில் இன்று (நவ.,21) காலை 10.08 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. இது புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. டாக்காவில் நடந்த, வங்கதேசம், அயர்லாந்து இடையிலான கிரிக்கெட் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. வீட்டின் சுவரின் சில பகுதிகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பாதசாரிகள் தண்டவாளங்கள் விழுந்து நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் உயரமான கட்டடங்களில் இருந்து வெளியேறி, திறந்தவெளிகளில் கூடினர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வட கிழக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எதிரொலித்தது.கோல்கட்டா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்குவதையும், மின் விசிறிகள் அசைவதையும் வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். கோல்கட்டாவில் மக்கள் ஏராளமான சாலையில் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை