உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரை சாடிய பிரசாந்த் கிஷோர்

பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரை சாடிய பிரசாந்த் கிஷோர்

பாட்னா: 'பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், மாநில மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்' என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் பீஹாரில் உள்ள நவாதா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்கினார். அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருந்தது. இந்நிலையில் பீஹார் மாநிலத்தில் உள்ள பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cfttge8p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து பீஹார் முதல்வர் நிதீஷ் குமார், மாநில மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பது அந்த மாநில மக்களின் பிரதிநிதி. ஆனால், நிதீஷ் குமார், சுயலாபத்துக்காக மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். நிதீஷ் குமாருடன் கடந்த காலத்தில் பணியாற்றிய நான் இப்போது ஏன் விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்?. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

SP
ஜூன் 15, 2024 21:12

இதில் தவறேதுமில்லை.ஆசிர்வாதம் வாங்குவதுபண்புள்ள செயல்தானே.பப்பு நியூகினியா நாட்டு அதிபரே நமது பிரதமரிடம் ஆசிவாங்கவில்லையா?


sankaranarayanan
ஜூன் 15, 2024 20:19

பொழப்புக்கு வழியே இனி இல்லாமல் தவிக்கும் இந்த கிஷோருக்கு இந்த நையாண்டித்தனம் எதற்கு உன்னை இனி யாருமே கூப்பிட மாட்டார்கள் நீ பாரதத்திற்கு செய்த செய்யும் மகா துரோகம் எந்த குறுக்கு வழியிலாவது எப்படியாவது பல கோடி சம்பாதித்துவிட்டு எதிர் காட்சிகளை அரியாசனத்தில் அமர்த்தும் நாயகா நீ பாரத பண்பாடு நோக்கம் புனிதம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு பணத்திற்காக விற்றுவிட்டு ஒவ்வொரு மாநிலத்திலிலும் நமது பண்பாட்டை இழக்க வைத்துள்ளாய் இதைவிட வேறு என்ன தீங்கு நீ நமது நாட்டிற்கு செய்ய வேண்டும்


குமரன்
ஜூன் 15, 2024 19:45

பணத்திற்கு ஆசைப்பட்டு நயவஞ்சகர்களுக்கு சகுனி வேலை பார்ப்பது அர்ப்பத்தனம் என்று தெரியவில்லை


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 18:59

பேமன்ட் கிடைக்க வாய்ப்பில்லாத நிதீஷை இப்படிப் பேசுகிறார். அடுத்த திட்டு விடியலுக்கு?


ayen
ஜூன் 15, 2024 18:37

அரசியல் செய்ய வேற ஒன்றும் இல்லை கிஷொர்க்கு. பிரதமர் ஒரு முதல்வரின் கால்களில் விழுந்தால் கேவலம். முதல்வர் பிரதமரின் விழ பொனவரை தடுத்து நிறுத்தியது பிரதமரின் பெருந்தன்மை இந்த செயலை பாராட்ட மனம் இல்லை கிஷொர் பிரசாந்துக்கு.


NAGARAJ THENI KALPAKKAM
ஜூன் 15, 2024 17:46

காலக் கொடுமை.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ