வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு என்பது கம்யூனிஸ்ட்களின் கூடாரம். கம்யூனிஸ்ட் புகுந்த இடம் எப்புடி முன்னேறும்.ஒழுங்கா நடக்குறதையும் நடக்க விடாம பண்றது இவிங்களோட வேலை. பேங்க் இம்ப்ரூவ்மெண்ட் வேணும்கிறது மிகவும் முக்கியமானது. இவிங்களை புறம் தள்ளணும்.
என்னவோ வங்கி ஊழியர்கள் வேலை செஞ்சு கிழிக்கிற மாதிரி.
வங்கி உயர் பதவிகளுக்கான பணி நியமனத்தில், வெறும் பட்டப் படிப்பும், சாதிய இட ஒதுக்கீடும், பெஞ்சு தேய்த்த அனுபவமும் மட்டும் போதாது. தகுதி, திறமை தான் முக்கியம் என்ற அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளுக்கு தனியார் நிர்வாகிகள் நியமிக்கப் படுவதாக இருந்தால், அந்த நடவடிக்கை சரியானதே. அதே சமயத்தில், தேர்வாகும் நபர் கண்டிப்பாக, மூன்று ஆண்டு அல்லது ஐந்து ஆண்டு சட்டக் கல்வி பயின்றிருக்க வேண்டும். LL.BorBLMandatory அது மட்டும் போதாது. கூடுதல் சிறப்புத் தகுதியாக, CA/CS/ICWA or MBA from IIM only ஆகிய படிப்புகளில் குறைந்தது ஏதாவது இரண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, வங்கி அனுபவம் இருந்தால், Preference என்று வரையறுக்க வேண்டும். வங்கி அனுபவம் குறைவாக இருந்தால், Training கொடுத்து ஈடு கட்டி விடலாம். நன்றி
நல்ல முடிவு.
சங்கத்தினர் சொல்வது ஓரளவுக்கு சரிதான்.. பணி விதிகள் தெரியாமல், தனக்கு வேண்டியவர்கள், உடலழகு, அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு வெயிட்டேஜ் கொடுக்கும் .. விதி மீறி ப்ரமோஷன் அளிப்பது தனியார் துறையில் பிரிக்கமுடியாத ஒரூ கேவலம்....
தனியார் வங்கி ஊழியர்கள் [சாதாரண ஆபீசரில் இருந்து உயர் பதவிகள் வரை] திறமை, நவீன நிர்வாக மேலாண்மை, சோம்பேறித்தனம் இல்லாமை ஆகியவற்றில் மேம்பட்டவர்கள் ....
பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக உயர் பதவிகளை தனியார் துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பது என்பது ஒட்டுமொத்த உயர்பதிவிகளகளுக்கல்ல. CMD எனப்படும் தலைவர் மற்றும் மேனேஜிங் டைரக்டர், மற்றும் Executive Director எனப்படும் நிர்வாக இயக்குனர்களின் பதவிகள் மட்டும்தான். இந்தப்பதவிகள் எல்லாம் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆலோசனைகளின் படி, மத்திய அரசின் நிதித்துறையால் நியமிக்கப்படுகிறார்கள். எனவே இவர்களது பணிகளில், மத்திய அரசின் நிதித்துறை அதிகாரிகள் அதிகாரம் செலுத்துவதை தவிர்க்கமுடியாது. பொதுத்துறை வங்கிகள் தேசியமாக்கப்பட்டபின்னரே சிறு, குறு மற்றும் மத்திய தொழிற்சாலைகள் அதிகமாக ஆரம்பிக்கப்பட்டு பொருளாதாரம், வேலை வாய்ப்பு எல்லாம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வராக்கடன் அதிகரித்திருந்ததற்கு சோனியா, சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளின் தலையீடு ஒரு முக்கிய காரணம். ஆனால், வங்கிகளில் கீழ் மட்டத்திலுள்ள, உதவி மேலாளர்கள், எழுத்தாளர்கள் போன்ற பணியாளர்கள் அவர்களின் சங்கங்கள் வலுவாக இருந்ததால், கடந்த காலங்களில், அவர்கள் 100% அர்ப்பணிப்புடன் பணிசெய்யவில்லை என்பது உண்மை. பிஜேபி அரசு அந்த கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் நமது வங்கிகளின் நிலைமை நல்ல முறையில் முன்னேறியுள்ளது. வராக்கடன் குறைந்துள்ளது. வங்கிகளின் லாபங்கள் அதிகரித்துள்ளன. வங்கிக்கிளைகளில் தற்போது கணனி சேவை அதிகரித்துள்ளதால், அதிக பணியாளர்கள் இல்லை. தனியார் நிர்வாகிகளை கொண்டுவந்தால், அவர்களுக்கு லாபம் ஒன்றேதான் குறிக்கோளாக இருக்கும். வங்கி சேவைகள் தற்போது உள்ளதைவிட சிறப்பாக மாறலாம். ஆனால், பணியாளர்களுக்கு அதிக பணிச்சுமை, அதனால் ஏற்படும் பின்விளைவுகள் சிறப்பாக இருக்காது. மத்திய அரசின் இந்த தற்போதைய முடிவு வங்கி வளர்ச்சிற்கு நல்லதல்ல என்பதே என்னுடைய கருத்து.
It is high time, fresh blood of brought into PSUs. Otherwise they are grinding the sane stuff till their retirement
ஆமா, வேற என்ன செய்வாங்க ? அசோகர் மரம் நட்டத்தையும், சாலை போட்டதையும் படிச்சிட்டு வந்து, பொதுத்துறை வங்கியில் வேலைக்கு சேர்ந்து, பின்னர் அதில் உயர்பதவி அடைஞ்சா, வங்கிகளின் கதி, அதோகதி தான். தனியாரில் இருப்பதைப்போல, ICWA / CA / ACS / BL / MBA போன்ற உயர்கல்வியில் குறைந்தபட்சம் மூன்று பயின்றவருக்கு தான், நிதி துறையில் மேனேஜர் பதவியே கிடைக்கும். இப்போ உங்களுக்கு என்ன கவலை ?? உங்களை கேள்வி கேட்க ஒருத்தர் வந்தாச்சு. அனைத்து பொதுத்துறை வங்கிகளின் நேரடி நிர்வாகத்தை நிர்வகிக்க, அவங்க ஆளை போட்ருவாங்க. இனி மசால்வடை மற்றும் டீ சாப்பிட்டு, குறித்த நேரத்துல மத்திய உணவு சாப்பிட்டு, சாயந்திரம் சரியா கதவை மூடிட்டு போற வேலை எல்லாம் நடக்காது. தனிப்பட்ட ஊழியரின் கல்வி, திறமை, போட்டிபோடும் திறன், மேற்கொண்டு தொடர்ந்து படித்து தன்னை புதுப்பிப்பது, கூடுதல் நேர பணி, குறைந்த ஆட்கள் / நிறைவான கையாளும் திறன், மல்டி டாஸ்க் போன்றவை நடைமுறைப்படுத்தப்படும். வேலைநிறுத்தம், எப்போதும் விடுமுறை, உண்ணாவிரதம், ஊர்வலம், கொடி, கோஷம், எப்போதும் ஊதிய உயர்வு, பஞ்சபடி, கூடுதல் சம்பளம், போனஸ், சம்பள கமிஷன், ஊழியர் சங்கம் போன்றவற்றிற்கு சங்கு ஊதப்படும். இதைத்தான் திரு. மன்மோஹனும் விரும்பினார். அவர்போட்ட பிள்ளயார்ச்சுழிக்கு தற்போது தான் செயல்வடிவம் வந்துள்ளது. ஆனால், காலத்தின் கட்டாயம், தற்போது அரசுத்துறை / பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகிறது.
பாரத ஸ்டேட் வங்கி சட்டம், வங்கி நிறுவனங்கள் சட்டம் மற்றும் எல்.ஐ.சி., சட்டங்களில் எந்த திருத்தங்களையும் கொண்டு வராமல், நேரடியாக மத்திய அரசு இந்த மாற்றங்களை அறிமுகம் செய்திருக்கிறது. — பொதுத்துறை நிதி நிறுவனங்களை ஹோல்சேலில் ஸ்வாகா பண்ணத் தான்
பொது துறை என்று சொல்லி விடீர்கள், பின் எப்படி அரசு நிர்வாகமாகும், அந்த பொதுத்துறை நிறுவனம்தான் எதையும் தீர்மானிக்கும். வெளியில் இருந்து நிர்வாக திறமை உள்ளவர்களை சில முக்கிய பணிகளுக்கு தேர்ந்து எடுக்கும் அதிகாரம் அந்த நிர்வாகத்தின் மேலாளர்கள்தான் தீர்மானிப்பார்கள். உருட்டுவதற்காக உருட்டப்பட்ட புரளி.