உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரியங்கா கன்னம் போல் சாலை: பா.ஜ., வேட்பாளர் வாக்குறுதியால் காங்., கோபம்

பிரியங்கா கன்னம் போல் சாலை: பா.ஜ., வேட்பாளர் வாக்குறுதியால் காங்., கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''டில்லியில் நான் வெற்றி பெற்றால், காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் கன்னங்கள் போன்று சாலை அமைக்கப்படும்,'' என பா.ஜ., வேட்பாளர் ஒருவர் அளித்த வாக்குறுதி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அவருக்கும், பா.ஜ.,வுக்கும் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.டில்லியின் கல்கஜி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுபவர் ரமேஷ் பிதுரி. இவர் பிரசாரத்தின் போது, ' நான் வெற்றி பெற்றால், பிரியங்காவின் கன்னம் போல் சாலை அமைத்து தருவேன்', எனக்கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wd8w6su4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரசின் சுப்ரியா ஸ்ரீநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரமேஷ் பிதுரியின் கருத்து அவரின் மனநிலையையும், பா.ஜ.,வின் உண்மையான முகத்தையும் எடுத்துக் காட்டுகிறது. பா.ஜ., பெண்களுக்கு எதிரான கட்சி. லோக்சபாவில் சக எம்.பி., ஒருவரை மோசமாக விமர்சித்ததற்காக எந்த தண்டனையும் கிடைக்காத நபரிடம் எப்படி நாகரீகமான கருத்தை எதிர்பார்க்க முடியும். இதற்காக பா.ஜ., பிரியங்காவிடம் கையேந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பதிலடி

பிரியங்காவை ஒப்பிட்டு கூறியதை உறுதி செய்த ரமேஷ் பிதுரி மேலும் கூறியதாவது: லாலு பிரசாத் யாதவ், ஒரு முறை பீஹார் சாலையை ஹேமா மாலினியின் கன்னம் போல் மாற்றுவேன் என்றார். இன்று எனது கருத்தால், வேதனை அடைந்ததாக கூறும் காங்கிரஸ், ஹேமா மாலினி குறித்து கவலைப்படாதது ஏன். அவர் பிரபலமான ஹீரோயின். திரைப்படம் மூலம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். லாலுவின் கருத்துக்காக எந்த கவலையையும் தெரிவிக்காதவர்கள், எப்படி என்னை கேள்வி கேட்கலாம்.ஹேமா மாலினி பெண் இல்லையா? சாதனை என்று வரும்போது, பிரியங்காவை விட அவர் உயர்ந்தவர் தான்.இவ்வாறு அவர் கூறினார். ரமேஷ் பிதுரியின் கருத்துக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இவரின் கருத்துகள், பெண்களுக்கு பா.ஜ., அளிக்கும் மரியாதையை காட்டுகிறது. இவரைப் போன்றவர்களால், டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா. இவ்வாறு அவர் கூறினார்.

மன்னிப்பு கோரினார்

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இதற்கு முன்னரும், இதுபோன்ற கருத்துகள் கூறப்பட்டு உள்ளன. லாலு சொன்னதை போலத் தான் நானும் சொன்னேன். அப்போது, லாலு மத்திய அமைச்சராக இருந்ததால், காங்கிரஸ் அமைதி காத்தது. எனது கருத்தால் யாருக்கேனும் வருத்தம் ஏற்பட்டால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது வார்த்தைகளை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

kulandai kannan
ஜன 06, 2025 09:13

பிரியங்காவுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துபேசியவரை, பாஜக உடனடியாக வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.


Sampath Kumar
ஜன 06, 2025 08:57

இந்த மாதிரி அசிங்க புடிச்ச கீழ்த்தரமான அய்யோக்கிய ரசிக்கர்கள் நிறைந்த கட்சி தான் பிஜேபி கும்பல் இவனுக அடுத்தவனை கிண்டல் பண்ண என்ன யோக்கியதை இருக்கு


M Ramachandran
ஜன 06, 2025 08:51

உண்மையை தவிர மற்ற எல்லாம் ஜிகினா வேலை செய்து பள பளக்க வைக்கும் கில்லாடிகள்.


Sankare Eswar
ஜன 06, 2025 08:46

குண்டும் குழியுமா சாலையை போட்டு கொள்ளையடிக்கலாம்ன்னு பார்க்குறீங்களா?


D.Ambujavalli
ஜன 06, 2025 06:06

இந்த மாதிரி அநாகரிகப் பேச்சுக்கு கட்சி பேதம் எதுவும் கிடையாது


தாமரை மலர்கிறது
ஜன 06, 2025 00:52

சினிமா பாணியில் கவர்ச்சியாக பேசினால் தான் மக்கள் கவனிக்கிறார்கள் என்ற அடிப்படையில் சிலர் பேசிவிடுகிறார்கள். ஆனால் அதுவும் உண்மை தான். அரசியலில் வெற்றி மட்டுமே இலக்கு.


Oviya Vijay
ஜன 06, 2025 00:42

எத்தனை முறை நான் என்னைப் பற்றி எடுத்துக் கூறினாலும் என் பெயரை வைத்துக் கொண்டு நான் ஏதோ கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் என இங்கே எழுதுவது அவர்களின் மடத்தனத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது. நான் பலமுறை குறிப்பிடுவது போல சம்பந்தமே இல்லாமல் வேற்று மதத்தை சீண்டிவதைத் தான் சங்கிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பதை இவர்களும் நிரூபிக்கின்றனர். என்றைக்குத் தான் திருந்துவார்களோ...


S.Martin Manoj
ஜன 06, 2025 18:53

மூளைக்கு பதில் அவர்களுக்கு மாட்டுச்சாணம் மட்டுமே உள்ளது.


Balasubramanian
ஜன 05, 2025 22:01

கன்னா பின்னா என்று பேசினால் உடனே பரபரப்பு ஏற்பட்டு அதை அவரை கவனிக்கிறார்கள்! இல்லை என்றால் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்! நல்ல பொழப்பு ! ரோடு ராகுல் மாதிரி காணாமல் போய் விட்டது முதலில் அதை கவனியுங்கள்!


RAMAKRISHNAN NATESAN
ஜன 05, 2025 21:17

ஹேமமாலினியோ, பிரியங்காவோ ரசிக்கும்படி இல்லை .....


sankaranarayanan
ஜன 05, 2025 21:10

முன்பே இதேபோன்று ஒரு பெரிய நடிகையின் கன்னத்தை ஒப்பிட்டு ஒரு அரசியல்வாதி பேசி கலவரம் வெடித்தது இப்போது அதே போன்று திரும்பவும் கன்னத்தை ஒப்பிட்டு ஒரு பேச்சு வந்துள்ளது அரசியல்வாதிகளுக்கு ஒப்பிடுவதற்கு வேறு ஒன்றுமே கிடைக்க வில்லையா


சாண்டில்யன்
ஜன 05, 2025 22:01

இதிலென்ன தடி நோகாமல் பாம்படிக்கிற வேலை அதென்ன பொத்தாம்பொதுவாக அரசியல்வாதிகளுக்கு என்று சொல்வானேன் இப்படி பட்ட பேச்சுகளுக்கு பிஜேபிகாரனுங்க மட்டுமே பேர்போனவங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை