உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலம் விற்பனையில் ஊழல்; மஹா., கூட்டணி அரசுக்கு சிக்கல்

நிலம் விற்பனையில் ஊழல்; மஹா., கூட்டணி அரசுக்கு சிக்கல்

மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், ஏதாவது ஒரு பிரச்னை தலைதுாக்கி, பா.ஜ.,வை சிக்கலில் ஆழ்த்தி வருகிறது. துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சி தலைவருமான, அஜித் பவாரின் மகன் பார்த் பவாரால் இப்போது புதிய பிரச்னை.புனேவில், 40 ஏக்கர் அரசு நிலத்தை துணை முதல்வரின் மகன் நிறுவனம் வாங்கியது. 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அரசு நிலம், வெறும், 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. 'அஜித் பவாரின் அதிகாரம் தான் இந்த ஊழலுக்கு காரணம்' என, அனைத்து எதிர்க்கட்சிகளும் களத்தில் குதித்தன.'இதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை' என, அஜித் பவார் மறுத்தாலும், விவகாரம் நிற்கவில்லை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அண்ணா ஹசாரே இந்த விவகாரத்தில் அஜித் பவாரை குற்றஞ்சாட்டினார். இது முதல்வருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ஆனால், அஜித் பவாரின் உறவினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, பவாருக்கு ஆதரவாக அறிக்கை விட்டார்.இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தர விட்டார் முதல்வர். 'பெரும் ஊழல் நடந்துள்ளது' என, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது விசாரணைக் குழு. இதையடுத்து, நிலம் வாங்கியது ரத்து செய்யப்பட்டது; அரசு அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்; வழக்கும் பதிவு செய்யப்பட்டது.முதல் தகவல் அறிக்கையில், அஜித் பவாரின் மகன் பார்த் பெயர் இடம்பெறவில்லை; இது மேலும் பிரச்னையை அதிகரித்துள்ளது. 'நிலம் வாங்கும் பத்திரத்தில், யார் கையெழுத்திட்டனரோ, அவர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்ய முடியும்' என, போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும், இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றனர். நிலம் வாங்கிய நிறுவனத்தின், 99 சதவீத பங்குகளை, பார்த் வைத்திருந்தாலும், நிறுவனத்தின் பார்ட்னர் பாட்டீல் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 17:10

1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், வெறும், 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. இது ஊழலே அல்ல. இதுவே 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், 2000 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருந்தால் அது வேறு கட்சி ஆளும் மாநிலத்தில் நடந்தால் அது உலக மகா ஊழல்


S Kalyanaraman
நவ 09, 2025 12:35

துணை முதல்வர் அஜித் பவார் அவரின் செயலுக்கு உடந்தையாக இருந்த முதல்வர் பனாவிஸ் இருவரையும் மாற்ற வேண்டும்.


RAMESH KUMAR R V
நவ 09, 2025 11:26

எந்த கட்சியானாலும் தவறு தவறு தான். சட்டம் கடமையை செய்யும்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 17:05

சட்டம் கடமையை செய்யும் என்பது தவறு. சட்டம் கடமையை செய்ய வேண்டும். செய்ய அனுமதிக்கவேண்டும்


bharathi BJP Member
நவ 09, 2025 10:08

Alliance with Pawar is a set back to BJP similarly with AIADMK too. BJP will face the challange.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 09, 2025 22:12

you Mean to say BJP aligning with ADMK is wrong? already BJP secretly aligned with DMK. Yes we have seen Annamalais efforts and cries were thrown into dust bin.


Gokul Krishnan
நவ 09, 2025 08:33

ஊழல் கொள்ளை அடிப்பதில் காங்கிரஸ் பிஜேபி தி மு க அ தி மு க என்று எந்த கட்சி பாகுபாடு கிடையாது பதவியில் இருக்கும் வரை எவ்வளவு சுருட்ட வேண்டுமோ சுருட்டு இது ஒன்று தான் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை


பிரேம்ஜி
நவ 09, 2025 08:22

ஊழல் ஒரு சிக்கல்? இல்லவேயில்லை! நம் நாட்டில் தலைவர்களுக்கு அது ஒரு தகுதி! பெரிய ஊழல் செய்பவர் பெருந்தலைவர் என்று கொண்டாடும் மக்கள் உள்ள நல்ல நாடு!


Indian
நவ 09, 2025 07:52

பா சா ஒரு ஊழல் கட்சி ....


duruvasar
நவ 09, 2025 10:05

உச்சா நீதிமன்றமே சொல்லிவிரட்டது. எல்லாம் கலைஞ்சு போங்க.


RAAJ68
நவ 09, 2025 07:06

பள்ளிக்கரனை சதுப்பு நில ஊழல் என்னாயிற்று. அது என்ன அமைச்சர்கள் துணை முதல்வர்கள் எல்லாம் எப்படி 400 ஏக்கர் நிலம் வாங்குகிறார்கள். சாதாரண மனிதனுக்கு 400 சதுர அடி கூட வாங்க முடியவில்லை. உச்சவரம்பு என்று எதுவும் கிடையாதா?


Indian
நவ 09, 2025 07:02

யோக்கியமே என்று சொல்லிக்கிட்டு இருக்க வேண்டியது தான்


duruvasar
நவ 09, 2025 10:06

பாசக திராவிட கட்சியில்லை .


Iyer
நவ 09, 2025 06:39

BY ACCEPTING "AJIT PAWAR:" IN THEIR COALITION, BJP HAD COMMITTED A "" HIMAALAYAN BLUNDER"" BY ALLOWING "" AJIT PAWAR "" TO CONTINUE IN THE MINISTRY & BY ""NOT IMPLICATING "" PARTH PAWAR IN THIS OFFENCE, BJP IS PROVING - THEY ARE NOT ANY DIFFERENT FROM THE CORRUPT FAMILY PARTIES OF INDIA""


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை